Vaa Vaathiyaar Teaser : வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் டீசர் (Vaa Vaathiyaar Teaser) வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

வா வாத்தியார்

கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. அவர் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘வா வாத்தியார்’ படம் (Vaa Vaathiyaar Teaser) ரிலீசுக்கு தயாராகி வருகிறது. காதலும் கடந்து போகும், சூது கவ்வும் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டு இப்படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தில் கார்த்தியுடன் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் G.M சுந்தர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். தற்போது வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

வா வாத்தியார் படத்தின் டீசர் (Vaa Vaathiyaar Teaser)

கடந்த 8 வருடங்களுக்குப் பிறகு நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் வா வாத்தியார் ஆகும். கார்த்தி மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்து படம் எடுப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த பெரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது வெளியாகியுள்ள வா வாத்தியார் படத்தின் டீசர் (Vaa Vaathiyaar Teaser) அமைந்துள்ளது. டீசரின் தொடக்கத்தில் கார்த்தி ஒரு சீரியஸான காவல் துறை அதிகாரியாக வருகிறார். அதன் பிறகு தான் தெரிகிறது இது சீரியஸான போலீஸ் இல்லை, சிரிப்பு போலீஸ் என்று. இந்த டீசரானது வசனமே இல்லாமல் பின்னணி இசையுடன் படத்தில் உள்ள பல்வேறு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த படம் எந்த மாதிரியான கதைக்களத்தை கொண்டிருக்கும் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு படத்தின் டீசர் அமைந்துள்ளது. இருந்தாலும் இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவம் ஒன்று காத்திருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.

Latest Slideshows

Leave a Reply