Vaanam Vasappadum Book Review : வானம் வசப்படும் புத்தக விமர்சனம்

வானம் வசப்படும் என்ற நாவலை புதுச்சேரி கவர்னர் டூப்ளக்ஸ் வசம் தலைமை துபாஷியாக (மொழிபெயர்ப்பாளர்) இருந்த ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் நாட்குறிப்பை பின்பற்றி புதுச்சேரியை சேர்ந்த பிரபஞ்சன் எழுதியிருப்பதை படிக்கும் போது புதுச்சேரி மாநிலத்தின் வரலாறும், இந்தியா ஜாதிகளின் தொகுப்பு என்பதும், கிறித்தவமும், இஸ்லாமும் இந்தியாவில் நுழைவதும், அந்த காலத்தில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாக சொல்லப்படுவது எப்பேர்ப்பட்ட பொய் என்பதை இந்த வானம் வசப்படும் (Vaanam Vasappadum Book Review) புத்தகத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

பிரெஞ்சுக்காரர்களின் வருகை

பிரெஞ்சுக்காரர்கள் வியாபாரத்துக்காக இந்தியா வந்திருந்தாலும் இங்கு வசிக்கும் மக்களை கிறித்துவ மதத்துக்கு மாற்றுவதும், நிலங்களின் உண்மையான அதிகாரத்தை பெற்று பிரெஞ்சு அரசருக்கு சமர்ப்பிப்பது போன்றவற்றை இந்த புத்தகத்தில் (Vaanam Vasappadum Book Review) தெளிவாக ஆசிரியர் பிரபஞ்சன் எடுத்துரைக்கிறார். இதுமட்டுமல்லாமல் பிராமணர், முதலியார், ரெட்டியார், நாயக்கர் போன்ற உயர் சாதியினர் மட்டுமே பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் உயர்மட்ட பதவிகளை அனுபவித்திருக்கின்றனர். மேலும் அவர்கள் தங்களின் உறவினர்களுக்கு லஞ்சம் கொடுத்து வாங்கிய பதவிகளை 2 முதல் 3 தலைமுறைகள் வரை வாழ்ந்திருப்பது இந்த புத்தகத்தின் மூலம் தெளிவாக தெரிகிறது. மேலும் அந்த காலத்தில் நிலத்தின் உரிமை, குத்தகை உரிமை, வர்த்தக உரிமை என அனைத்து தொழில்களும் பிறப்பால் கிடைத்திருக்கின்றதே தவிர திறமை மூலம் கிடைத்தது என சொல்லிக்கொள்வதற்கெல்லாம் எந்த இடமும் இருந்திருக்கவில்லை.

வானம் வசப்படும் (Vaanam Vasappadum Book Review)

அந்த காலங்களில் வங்கிகள், கடன் வசதிகள் என எதுவுமே இல்லாததால் பணத்தை மண்ணில் புதைத்து வைப்பது மட்டுமே மக்களுக்கு தெரிந்த சேமிப்பு பழக்கமாக இருந்துள்ளது. மேலும் இந்துக்களின் கோவில்கள்தோறும் தாசிகள் பரம்பரை பரம்பரையாக இருந்துள்ளனர் என்பது இந்த வானம் வசப்படும் புத்தகத்தின் (Vaanam Vasappadum Book Review) மூலம் தெளிவாக தெரிகிறது. பண்டைய காலங்களில் ஊரில் உள்ள பணக்காரர்கள் சதிர் நடனத்தையும், தாசிகளுக்கு பணத்தை செலவிடுவதும் சமூக அடையாளமாக கருதியிருக்கின்றனர். மேலும் அரசாங்கத்தின் முக்கிய விழாக்கள் தாசிகள் மூலமாக நடந்து வந்திருப்பதை இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.         

இன்றைய உலகில் மக்களாட்சி என்ற பெயரில் நாம் எவ்வளவு சுதந்திரத்தை அனுபவிக்கிறோம், உழைப்புக்கான ஊதியம், மருத்துவ வசதிகள், ஓய்வு, மக்களின் அதிகாரம் மற்றும் மக்கள் மனிதர்களாக எவ்வாறு மதிக்கப்படுகின்றனர் என்பதை அறிய வானம் வசப்படும் என்ற புத்தகத்தை கண்டிப்பாக (Vaanam Vasappadum Book Review) ஒரு முறை வாசிக்க வேண்டும். மேலும் வாசிக்கவும் உங்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கவும் ஏற்ற நூல்களுள் “வானம் வசப்படும்” மிகவும் முக்கியமான நூலாகும்.

Latest Slideshows

Leave a Reply