Vaazhai Movie First Single : வாழை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

ராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் இதுவரை மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. அந்த மூன்று படங்களுமே தரமான படைப்புகளாக உருவாகி அவரை முன்னணி இயக்குனர்கள் வரிசையில் கொண்டு சென்றுள்ளது. அவர் தற்போது வாழை படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் (Vaazhai Movie First Single) வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மாரி செல்வராஜ் :

மாரி செல்வராஜ் ராமிடம் அலுவலக உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர் பல வருடங்கள் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2018 இல் வெளியான இப்படம் மெகா பிளாக் பஸ்டர் ஆனது. முதல் படத்திலேயே சாதிய அட்டூழியங்களை தோலுரித்து காட்டும் தைரியமிக்க இயக்குனராக ஜொலித்தார் மாரி செல்வராஜ். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய கர்ணன் படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றாலும், தூத்துக்குடி மாவட்டம் கொடியாங்குளத்தில் காவல்துறை நடத்திய அராஜக தாக்குதலை மையமாக வைத்து மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். அந்த படமும் மாரி செல்வராஜுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இந்த இரண்டு படங்களை தொடர்ந்து மாமன்னன் படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக இது அமைந்தது. இந்தப் படத்திலும் இதுவரை யாரும் தொடாத கதைக்களத்தை கொடுத்தார். எம்.எல்.ஏவாகவே இருந்தாலும் சாதிய  வெறியர்கள் என்ன துன்புறுத்துகிறார்கள் என்று சொல்லியிருந்தார். படம் மெகா பிளாக் பஸ்டர் ஆனது. மேலும் வடிவேலுக்கு மாமன்னன் இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்தது.

Vaazhai Movie First Single :

முதல் இரண்டு படங்களின் வெற்றியை விட மாமன்னனின் வெற்றி பெரியது. இதனால் மாரி செல்வராஜ் மீது பலரது கவனம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அவர் அடுத்ததாக துருவ் விக்ரமுடன் பைசன் படத்தை இயக்கும் அவர், தற்போது வாழை படத்தை இயக்கி முடித்துள்ளார். முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். எனவே இதிலும் வித்தியாசமான கதைக்களத்தை எதிர்பார்க்கலாம். வாழை திரைப்படம் முதலில் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் வெளியாவதாக இருந்தது. ஆனால் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் (Vaazhai Movie First Single) நேற்று வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இப்படத்தில் இடம்பெற்றுள்ள தென் கிழக்கு தேன் சிட்டு என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணனின் மகள் தீ பாட யுகபாரதி எழுதியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply