Vada Malar Book Review : வாடா மலர் புத்தக விமர்சனம்

ஆசிரியர் மு.வரதராசன் எழுதிய வாடா மலர் கதையின் பாத்திரம் ஒன்று பேசியதையே கொடுத்திருப்பது இந்நூலின் கூடுதல் சிறப்பு என்று சொல்லலாம். இந்நிலையில் இந்நூலை பற்றி (Vada Malar Book Review) தெரிந்துக்கொள்வோம்.

நூலின் கதைக்களம்

வாடா மலரில் மு.வரதராசன் இரண்டு நண்பர்களின் கதையாக எடுத்து சென்றுள்ளார். சராசரி தாய் தந்தையால் வளர்க்கப்பட்டு சராசரி வாழ்க்கை வாழும் குழந்தைவேல். பக்கத்து வீட்டுக்காரன் தானப்பனும் தங்கை சுடர்விழியும் சிறுவயதிலேயே தாயை இழக்க, வந்த சித்தி எல்லா வழிகளிலும் கசக்கி பிழிகிறாள். ஆனால் தானப்பனுக்கு கல்வி போதவில்லை. படிக்க நேரமில்லாமல், பள்ளிக்கு செல்லும் வழியில் நண்பன் சொல்வதைக் கேட்டு, பாடங்களை மனப்பாடம் செய்கிறான். பசி மற்றும் உதைகளை சமாளிக்க முடியாமல் ஒரு நாள் வீட்டை விட்டு ஓடுகிறான். பணம் சம்பாதித்து பெரிய ஆளாக ஊர் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் நன்றாக இருந்தாலும் தான் வேலை செய்யும் புலால் உணவகத்தின் முதலாளியின் தவறான வழிகாட்டுதலால் பணம் சம்பாதிக்கும் ஆசையில் தானப்பன் போலீசில் (Vada Malar Book Review) சிக்கி சிறை செல்கிறார்.

குழந்தைவேல் கல்லூரிப் படிப்பை முடித்ததும், அவனுடைய பெற்றோர் அவரது கடையில் பாதியைக் கொடுத்து அவனுடைய வருமானத்திற்கு வழிவகை செய்து பூங்கொடி என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். குழந்தைவேலுவின் திருமணத்திற்கு வராத தங்கை சுடர்விழி, தானப்பனும் தந்தையின் மரணத்திற்காக ஊருக்கு வருகிறார்கள். சித்தி இருப்பதை சுருட்டிக்கொண்டு ஓடிவிடுகிறாள். தானப்பன் தனது செல்வத்தையும் செல்வாக்கையும் பெருக்கிக்கொள்ள நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட உயர்மட்டத்தில் துணைத் தலைவர் பதவி தேடி வருகிறது. அவர் கனகு என்ற பணக்கார பட்டதாரியை மணக்கிறார். முன்பு தனது முதலாளிக்காக விற்ற கள்ளசாராயத்தை புதிதாகத் திறக்கப்பட்ட தனது புலால் உணவகத்தில் சைட் பிசினஸ் செய்து வருகிறார். அதன்பிறகு தானப்பனும் தனது மனைவியும் ஒரே நாளில் இறந்து விடுகின்றனர். இதை (Vada Malar Book Review) தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதே நூலின் கதையாகும்.

வாடா மலர் (Vada Malar Book Review)

ஆசிரியர் மு.வரதராசன் எழுதியுள்ள இந்த வாடா மலர் நூலை வாசிப்பவருடன் பேசுவது போல அமைந்துள்ளது. வாழ்க்கையைப் பற்றி அவைகள் என்னவோ சொல்கின்றன. வடிவம், வாசனை, நிறம் ஆகியவை பூக்களின் சிறப்பு. மணம் கமழும் பூக்கள் வாடும்போது நிறம் மாறி வாழ்வும் மாறிப்போகும். வாசனை இல்லாத வாடா மல்லிகை வாடுவதும் இல்ல. நிறம் இழப்பதும் இல்லை. மனிதர்கள் பூக்களைப் போல பிறந்து வாழ்ந்து மறைகிறார்கள்.

புத்தகங்களோ, கருத்துக்களோ காலத்திற்கும் மாறுவதில்லை. திருக்குறளின் தெய்வப்புலவர் குறளைப் போன்றே இரண்டடிகளில் உரை எழுதிய அறிஞர் பெருமகனாரும் வாடா மலரின் ஆசிரியருமான மு.வரதராசனும் மறைந்து போனார். ஆனால் அவர்களின் படைப்புகளில் மிகவும் தனித்துவமான உயர் தனிச் செம்மொழியான (Vada Malar Book Review) தமிழ் இன்றும் வாழ்கிறது. இணையதளம் என்ற தளத்தின் மூலம் இன்னும் இளமையாக வாழ்கின்ற தமிழே வாடா மலர்.

Latest Slideshows

Leave a Reply