Vadivelu And Fahadh Faasil Reunite : மீண்டும் இணையும் வடிவேலு - ஃபகத் பாசில் | ரசிகர்கள் உற்சாகம்

மாமன்னன் திரைப்படத்தைத் தொடர்ந்து ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98 வது திரைப்படத்தில் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் (Vadivelu And Fahadh Faasil Reunite) இணைகின்றனர். தமிழ் திரையுலகில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான சூப்பர்குட் பிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தந்து சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. அந்த வகையில் இந்த முன்னணி நிறுவனம் தயாரிக்கும் 98வது படத்திற்கான அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் மற்றொரு ஆச்சரியத் தகவலையும் படக்குழு அறிவித்துள்ளது.

சூப்பர் குட் பிலிம்ஸ் :

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 98வது படத்தை சதீஷ் ஷங்கர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தமிழில் “ஆறு மனமே” மற்றும் மலையாளத்தில் “வில்லி வீரன்” ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா  இசையமைக்கிறார்.

Vadivelu And Fahadh Faasil Reunite :

மேலும் இப்படம் குறித்த ஆச்சர்யமான தகவலாக வடிவேலுவும், ஃபகத் பாசிலும் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் (Vadivelu And Fahadh Faasil Reunite) வெளியாகியுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில் மிரட்டல் வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வைகை புயல் வடிவேலு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். அரசியல் களத்தில் ஒளிபரப்பான மாமன்னன் படத்திற்குப் பிறகு வடிவேலுவும், பகத் பாசிலும் மீண்டும் இணைவதால் (Vadivelu And Fahadh Faasil Reunite) ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் ஃபகத் பாசில் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் உள்ளிட்ட அவரது தமிழ் படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதையடுத்து தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்த நடிகர் வடிவேலு, ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான மாமன்னன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. சந்திரமுகி 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் ஃபகத் பாசிலுடன் இணைந்து வடிவேலு நடிக்கும் (Vadivelu And Fahadh Faasil Reunite) சூப்பர் குட் பிலிம்ஸின் 98வது படம் என்ன மாதிரியான கதைக்களமாக அமையும் என்ற யூகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply