Valentine's Day 2025 : காதலர் தினம் வரலாறும் & கொண்டாட்டமும்

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது காதலர் (Valentine’s Day 2025) தினம்தான். அன்றைய தினத்தில் காதலர்கள் தங்களுக்குள் மாறிமாறி காதலை கூறி பரிசு பொருட்கள் கொடுப்பது, சினிமா, பார்க், பீச் மற்றும் இரவு நேர பார்ட்டிகளில் கலந்துகொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

காதலர் தினம் வரலாறு

காதலர் தினம் பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படுவது தொடர்பாக பல கட்டுக்கதைகள் சொல்லப்படுகின்றன. இதில் பெரும்பான்மையானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று பண்டைய ரோமில் வாழ்ந்த கத்தோலிக்க பாதிரியார் செயிண்ட் வாலண்டைனின் பெயரால் காதலர் தினம் (Valentine’s Day 2025) அழைக்கப்படுவது. பிப்ரவரி 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ரோமானியர்கள் லுபர்காலியா எனும் பண்டிகையை கொண்டாடி வந்தனர். இந்த பண்டிகையில் ஆண்கள் நாயையும், ஆட்டையும் பலியிட்டு அதனுடைய ரோமத்தால் திருமணமாக பெண்களை அடிப்பார்கள். இது திருமணமாவதை ஊக்குவிக்கும் என்பதால் பெண்களும் இதை விருப்பப்பட்டு ஏற்றுக்கொண்டனர்.  

ரோமானிய பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் ஆட்சி காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. ஆண்கள் திருமணம் செய்துகொண்டால் காதல் மனைவியையும் குடும்பத்தையும் தனியே விட்டு, போருக்கு செல்ல தயக்கம் காட்டுவார்கள் என்பதால் மன்னர் இரண்டாம் கிளாடியஸ் திருமணத்திற்கு தடை விதித்தார். மேலும் அவர்களின் வீரம் குறைந்து விடும் என்பது பேரரசர் இரண்டாம்  கிளாடியஸ் அவர்களின் எண்ணமாக இருந்தது. இந்த சமயத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என ஆசைப்பட்ட ஆண்களுக்கு கத்தோலிக்க மதகுருவான வேலண்டைன் அரசரின் கட்டளையை மீறி திருமணங்கள் (Valentine’s Day 2025) நடத்தி வைத்தார். இந்த தகவல் அரசருக்கு தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்து பிப்ரவரி 14-ம் தேதி கொல்லப்பட்டார். அன்றைய தினம் முதல் இந்த நாள் வாலண்டைன் தினமாக (Valentine’s Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

காதலர் தின கொண்டாட்டம் (Valentine's Day 2025)

Valentine's Day 2025 - Platform Tamil

பிப்ரவரி 7-ம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை காதலர் தின (Valentine’s Day 2025) வாரமாகவே கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தின் முதல் நாளாக ரோஸ் தினம் (Rose Day) உள்ளது. ரோமானிய புராணத்தின்படி காதலின் கடவுளாக இருக்கும் வீனசுடன் தொடர்புடையதாக இந்த மலர் கூறப்படுகிறது. காதலர் தினத்தின் இரண்டாவது தினமாக ப்ரபோஸ் தினம் (Propose Day) உள்ளது. காதலர்கள் தங்களுடைய காதல் உறவை தங்களுடைய துணைக்கும், இந்த உலகத்திற்கும் வெளிப்படையாக  கூறும் நாளாக ப்ரபோஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

காதலர் தினத்தின் மூன்றாவது தினமாக சாக்லேட் தினம் (Chocolate Day) கொண்டாடப்படுகிறது. இந்த சாக்லேட் தினம் அன்பையும் (Valentine’s Day 2025) காதலையும் எடுத்துரைப்பதாக கருதப்படுகிறது. காதலர் தினத்தின் நான்காவது  தினமாக டெடி தினம் (Teddy Day) கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தின் ஐந்தாவது தினமாக பிராமிஸ் தினம் (Promise Day) கொண்டாடப்படுகிறது. காதலர் வாரத்தில் முக்கியமான நாளாக பார்க்கப்படுவது இந்த வாக்குறுதி தினம். இந்த நாளன்று காதலர்கள் தங்கள் உறவை மேம்படுத்தும் வகையில் வாக்குறுதிகளை எடுத்துக்கொள்வர்.

காதலர் தினத்தின் ஆறாவது தினமாக ஹக் தினம் (Hug Day) கொண்டாடப்படுகிறது. தொடுதல் என்பது ஒரு மொழி. அன்புக்குரியவர்களுக்கு காதலை வெளிப்படுத்தும் விதமாக கட்டிப்பிடிப்பது இந்த தினத்தில் (Valentine’s Day 2025) மேற்கொள்ளப்படுகிறது. காதலர் தினத்தின் ஏழாவது தினமாக கிஸ் தினம் (Kiss Day) கொண்டாடப்படுகிறது. அன்பின் வெளிப்பாடும் முத்தத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் தினம் இந்த கிஸ் தினம். இதனை தொடர்ந்து பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாக உலக நாடுகளில் உள்ள காதலர்களால் கொண்டாடப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply