Valparai : வனத்துறையினர் விதித்த புதிய கட்டுப்பாடு...

வன விலங்குகளின் அச்சுறுத்தல் அதிகமாக நடைபெறுவதால் மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர் வனத்துறை அதிகாரிகள்.

இந்திய அளவில் சுற்றுலாத்தலங்கள் என்றாலே தமிழ்நாடு தனி இடம் வகிக்கும். அப்படி தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறப்பான இயற்கை சுற்றுலா தளம் தான் Valparai. பொள்ளாச்சி நகரத்திற்கு அடுத்துள்ள வால்பாறை பகுதியை சுற்றி பார்க்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமான ஒன்று. தற்போது வனவிலங்குகளின் அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுவதால் அடிக்கடி அவை காட்டுப்பகுதியை விட்டு வெளியே வந்து சாலைகளில் சுற்றி திரிகின்றன.

இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஆபத்தை உணராமல் இரவு நேரங்களில் அதிகமாக வாகனங்களில் Valparai பகுதியில் சுற்றித் திரிகின்ற வனவிலங்குகள் தாக்கும் அபாயத்தில் உள்ளனர். எனவே சுற்றுலா பயணிகளின் நன்மையை கருதி மாலை 6 மணிக்கு மேல் பயணிகள் யாரும் தங்கும் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் சாலைகளில் சுற்றித் திரிய வேண்டாம் என்றும் வனத்துறையினர் அவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

Valparai - ஆழியார் சோதனை சாவடி :

வெளியூர் வெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை அந்த வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர தேவை இருந்தால் மட்டும் வால்பாறை மற்றும் காடம்பாறை போன்ற பகுதியில் உள்ள மக்கள் மட்டும் தங்களுடைய அடையாள அட்டைகளை காட்டி விட்டு செல்லலாம் என்று கூறியுள்ளனர்.

காட்டு யானை கூட்டம் :

வால்பாறையை அடுத்துள்ள குடியிருப்புக்குள் புகுந்த யானை கூட்டங்கள் கோயில் மற்றும் வீடுகளை இடித்து சேதப்படுத்தியுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகம் அதனை அடுத்துள்ள வால்பாறை என்.இ.பி.சி இதற்கு சொந்தமான தேயிலை தோட்டத்திற்கும் பல்வேறு அச்சுறுத்தல்களை அளித்து வருகின்றன. நள்ளிரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அந்த தேயிலை தோட்டத்திற்கு புகுந்து அனைத்தையும் நாசம் செய்கின்றன. அதுமட்டுமில்லாமல் அங்கு உள்ளூரில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்குள்ள உண்டியல்கள் மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகள் அந்த காட்டு யானைகளை விரட்டியுள்ளனர்.

காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வீடுகளை தாக்கியதால் அதனுடைய சுவர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் மக்களின் நலன் கருதி வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு அந்த யானைகளை விரட்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply