Vanangaan Teaser :அருண்விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் டீசர் வெளியீடு

பிதாமகன், நான் கடவுள், சேது, அவன் இவன், நந்தா ஆகிய படங்களை இயக்கிய பாலா தற்போது வணங்கான் படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள வணங்கான் படத்தின் டீசர் (Vanangaan Teaser) தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் சூர்யாவின் திரையுலக வாழ்க்கைக்கு நல்ல தொடக்கமாக அமைந்தன. இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா மூன்றாவது முறையாக பாலாவுடன் கை கோர்த்தார். தனது 2டி நிறுவனத்தின் கீழ் வணங்கான் திரைப்படம் தொடங்கப்பட்டது. கன்னியாகுமரியில் பல மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பின் போது பாலாவுக்கும் சூர்யாவுக்கும் சண்டை என்று சினிமா வட்டாரத்தில் அடிக்கடி வதந்திகள் வந்த நிலையில், சூர்யா அறிக்கை வெளியிட்டு வணங்கான் படத்தில் இருந்து விலகினார். இந்த அறிக்கையில் விலகுவதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து, அருண் விஜய் இந்த படத்தில் இணைந்தார்.

ஃபர்ஸ்ட் லுக் :

கடந்த ஆண்டு வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் அருண் விஜய் உடல் முழுவதும் சேற்றுடன் காணப்பட்டதோடு, ஒரு கையில் பெரியாரும், மறு கையில் பிள்ளையாருடன் ஆக்ரோஷமாக காணப்பட்டார். இந்த போஸ்டரை வைத்து பாலா என்ன சொல்ல வருகிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர்.

Vanangaan Teaser :

இந்நிலையில், படக்குழு ஏற்கனவே அறிவித்தபடி படத்தின் டீசர் (Vanangaan Teaser) தற்போது வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் பிரம்மாண்டத்துடன் டீசர் தொடங்குகிறது. தேவாலயத்தின் பின்னணியில், அருண் விஜய் நெற்றி நிறைய விபூதி பட்டை குங்குமத்துடன் காட்சியளிக்கிறார். மேலும் இப்படத்தில் மிஸ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் கலந்த இந்த படத்தில், அருண் விஜய் ஒரு கையில் பெரியாரும், மறு கையில் பிள்ளையாருமாக கிணற்றில் இருந்து வருவது போன்று காட்டப்படுகிறது. மேலும், டீசரின் ஒரு காட்சியில் சிங்கம் கர்ஜிக்கிறது. இது வேறு லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த டீசர் (Vanangaan Teaser) இணையத்தில் வைரலாகி வருகிறது. சுரேஷ் காமாட்சியின் வி புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யாவின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் இசையும் உள்ளன. வணங்கான் படத்தின் பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார், சண்டை மாஸ்டராக சில்வா பணியாற்றுகிறார். படம் எப்போது வெளியாகும் என அறிவிக்கப்படாத நிலையில், ரசிகர்களிடையே படத்தின் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply