VARANASI Official Teaser : "வாரணாசி" படம் வெளியானால் நிச்சயம் இது நடக்கும்..

எஸ்.எஸ்.இராஜமௌலி தனது பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்களை தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் வாரணாசி என்கிற திரைப்படத்தை உருவாக்கி (VARANASI Official Teaser) வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆனது கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், படத்தின் தலைப்பை பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வாரணாசி படக்குழு வெளியிட்டு உள்ளது. எஸ்.எஸ்.இராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ பட டைட்டில் டீசர் ஆனது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் உள்ளது

'வாரணாசி’ படக்குழுவினரின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழா

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழா 15.11.2025 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் ராஜமவுலி படத்தின் தலைப்பை பிரம்மாண்டமாக (VARANASI Official Teaser) அமைக்கப்பட்ட எல்இடி ஸ்கீரினில் டிரைலர் வீடியோவாக வெளியிட்டார். இப்படத்தின் இயக்குநர் இராஜமௌலி இந்தப் படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்க இருப்பதாக அறிவித்தார். 

2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியீடு (VARANASI Official Teaser)

இராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ படத்தில் நாயகனாக மகேஷ் பாபுவும் மற்றும் நாயகியாக பிரியங்கா சோப்ராவும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். எம்.எம்.கீரவாணி இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். வாரணாசியை மையப்படுத்திய புராணங்களின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை அமைக்கபட்டு இருக்கலாம் என தெரிகிறது. இந்தப் படத்தை 2027-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட  முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மகேஷ் பாபு ருத்ராவாக நடித்துள்ள ஃபஸ்ட் லுக் வெளியீடு

மகேஷ் பாபு ருத்ராவாக நடித்துள்ள கதாபாத்திரத்தின் ஃபஸ்ட் லுக் ஆனது காளை மீது கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போல வெளியாகியுள்ளது. டைட்டில் டீசர் வெளியீட்டு விழாவில் மகேஷ் பாபு எனது இந்த கனவு திரைப்படத்தின் மூலம் நான் இயக்குநர் மற்றும் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து (VARANASI Official Teaser) பெருமைப்படும் விதத்தில் இந்தப் படம் அமையும். ‘வாரணாசி’ படம் வெளியானபின் இது நிச்சயம் நடக்கும் என தெரிவித்துள்ளார்.

VARANASI Official Teaser - Platform Tamil

டைட்டில் டீசர் எப்படி?

சுமார் 3.40 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ள வாரணாசி டைட்டில் டீசர் பிரம்மாண்டமான விஷூவல்ஸ்களை கொண்டுள்ளது. இதன் முதல் ஃப்ரேம் கங்கை நதியின் விடியலில் 6-ம் நூற்றாண்டின் வாரணாசி ஜொலிப்பதை காட்டுகிறது. அடுத்தடுத்த காட்சிகள் ஆனது 2027-ம் ஆண்டில் பூமியின் மீது எரிகல் ஒன்று விழுவது, அண்டார்டிகாவின் ராஸ் பனி அடுக்கு, ஆப்பிரிக்காவின் கென்யாவில் உள்ள தேசிய வனவியல் பூங்கா, த்ரேதாயுகத்தில் இலங்கை நகரம் என தொடர்ந்து மீண்டும் வாரணாசியின் மணிகர்ணிகா காட் பகுதியில் முடிகிறது. அதன்பின் மகேஷ் பாபு இன்ட்ரோ ஆனது காளை மீது கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போல அமைந்துள்ளது. மகேஷ் பாபுவின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வீடியோவை படம்பிடித்த ரசிகர்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். 

Latest Slideshows

Leave a Reply