Veera Dheera Sooran Trailer : வீர தீர சூரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை (Veera Dheera Sooran Trailer) படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

சித்தார்த் நடிப்பில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘சித்தா’ படத்தை எழுதி இயக்கியவர் தான் இயக்குநர் அருண்குமார். இதற்கு முன்பாக இவர் இயக்கிய பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற அவரது முந்தைய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. தமிழ் சினிமாவில் தனது அடுத்த வெற்றியை சைலண்டாக பதிவு செய்து வரும் இயக்குநர் அருண்குமார், இப்போது நடிகர் விக்ரமை (Veera Dheera Sooran Trailer) ஹீரோவாக வைத்து ‘வீர தீர சூரன்’ படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படம், முதலில் இரண்டாம் பாகத்தையும், பின்னர் முதல் பாகத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது.

விக்ரமின் 62-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமூடு போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் கல்லூரி பாடல் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த சூழ்நிலையில், ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (Veera Dheera Sooran Trailer) வேல் டெக் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அபிஷேக் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளர் கிகி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

வீர தீர சூரன் ட்ரெய்லர் (Veera Dheera Sooran Trailer)

Veera Dheera Sooran Trailer - Platform Tamil

இதைத் தொடர்ந்து, இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் இரவு 8 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் சில காரணங்களால், படக்குழு இந்த படத்தின் ட்ரெய்லரை இரவு 10 மணிக்குப் மேல் வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரில், விக்ரம் ருத்ர தாண்டவத்தை முழுமையாக நிகழ்த்தியுள்ளார். ட்ரெய்லரை பார்க்கும்போது, இந்த படத்தின் கதை ஒரு இரவில் நடக்கும் ஒரு பரபரப்பான கதைக்களமாக (Veera Dheera Sooran Trailer) தெரிகிறது. ஒரு போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா தனது வழக்கமான அச்சுறுத்தும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படத்தை ரியா ஷிபு HR பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply