காய்கறிகளின் நன்மைகளும் அதன் தீமைகளும் | Vegetables Benefits in Tamil

Vegetables Benefits: நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் காய்கறிகள் (Vegetables) முக்கிய பங்கு வகிக்கிறது அதில்   ஒவ்வொரு காய்கறிகளும் (Vegetables) நம் உடலுக்கு தேவையான ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. பல நன்மைகளை கொடுக்கக்கூடிய இந்த காய்கறிகள் (Vegetables) சிலருக்கு சில நேரங்களில் கெடுதலாகவும் அமைகிறது. அவரவர்களின் உடலின் தன்மைக்கு ஏற்ப மாறி கெடுதலை உண்டாக்குகிறது. இத்தகு கெடுதலை உண்டு பண்ணும் காய்கறிகளை (Vegetables) யார் யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்பதை கீழே காண்போம். 

Vegetables Benefits in Tamil List

1.மஞ்சள் பூசணி (Pumpkin Benefits):

Pumpkin (மஞ்சள் பூசணி) - Platform Tamil

மஞ்சள் பூசணி பல மருத்துவ குணங்கள் உடையது. இது பரங்கிக்காய் என்றும் சொல்லப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ,பி,சி,டி,ஈ (Vitamin A,B,C,D,E)  உள்ளது. மேலும் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது.  இந்த காய் சிறுநீரகக்கல், மலச்சிக்கல்,  கெட்ட கொழுப்புகள்,  இரத்தஅழுத்தம், கல்லீரல், அல்சர் போன்ற பிரச்சனைகளுக்கு  தீர்வாக இருக்கிறது. இதில் உள்ள தீமைகள், இந்த காய் கெட்ட இரத்தத்தை தோற்றுவிக்கிறது. ஜீரணம் ஆக நீண்ட நேரம் எடுக்கிறது.நோயுற்று இளைத்தவர்களும், நோயாளிகளும் இக்காயை சாப்பிடக்கூடாது. 

2.பாகற்காய் (Bitter Melon Vegetables Benefits):

Bitter melon (பாகற்காய்) - Platform Tamil

பாகற்காய் (Bitter Melon Vegetables) கசப்பு சுவையில் இருப்பதால் நிறைய மக்கள் இந்த காயை உணவில் செத்துக்கொள்ள தயங்குகிறார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் இருக்கிறது. ஊட்டச்சத்துக்களான பொட்டாசியம், கார்போஹைட்ரெட், ஃபோலேட், கலோரிகள்,  நார்ச்சத்து, துத்தநாகம், இரும்புச்சத்து போன்றவை இதில் இருக்கிறது.  நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  இந்த பாகற்காயை தினமும் சரியான அளவில் உணவில் சேர்த்துக்கொண்டால்  உடலில் உள்ள பல பிரச்சனைகள் தீரும். சுவாசக் கோளாறுகளான ஆஸ்துமா, இருமல், சளி போன்றவைகளை தீர்க்கிறது. மேலும் குடற்புழுக்களை நீக்குகிறது, மலச்சிக்கல் மற்றும் புற்றுநோய் வருவதை தடுக்கிறது. இந்த காய் நீரிழிவு நோய்க்கு நல்லது (இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைகிறது) இவ்வளவு நன்மைகள் பாகற்காயில் இருந்தாலும் இந்த காயை அளவாகவே சாப்பிட வேண்டும். இல்லையென்றால் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் கர்ப்பிணி பெண்கள் பாகற்காயை தவிர்ப்பது நல்லது.

3.முருங்கைக்காய் (Drumstick Benefits):

முருங்கைக்காய் (Drumstick) - Platform Tamil

பாகற்காய் கசப்பு சுவையில் இருப்பதால் நிறைய மக்கள் இந்த காயை உணவில் செத்துக்கொள்ள தயங்குகிறார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் இருக்கிறது. ஊட்டச்சத்துக்களான பொட்டாசியம், கார்போஹைட்ரெட், ஃபோலேட், கலோரிகள்,  நார்ச்சத்து, துத்தநாகம், இரும்புச்சத்து போன்றவை இதில் இருக்கிறது.  நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  இந்த பாகற்காயை தினமும் சரியான அளவில் உணவில் சேர்த்துக்கொண்டால்  உடலில் உள்ள பல பிரச்சனைகள் தீரும். சுவாசக் கோளாறுகளான ஆஸ்துமா, இருமல், சளி போன்றவைகளை தீர்க்கிறது. மேலும் குடற்புழுக்களை நீக்குகிறது, மலச்சிக்கல் மற்றும் புற்றுநோய் வருவதை தடுக்கிறது. இந்த காய் நீரிழிவு நோய்க்கு நல்லது (இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைகிறது) இவ்வளவு நன்மைகள் பாகற்காயில் இருந்தாலும் இந்த காயை அளவாகவே சாப்பிட வேண்டும். இல்லையென்றால் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் கர்ப்பிணி பெண்கள் பாகற்காயை தவிர்ப்பது நல்லது.

4.வெள்ளரிக்காய் (Cucumber Vegetables Benifits):

வெள்ளரிக்காய் (Cucumber) - Platform Tamil

வெள்ளரிக்காயில் (Cucumber Vegetables) உள்ள நன்மைகளை அனைத்து  மருத்துவமும் ஆதரிக்கிறது. இது நீர்ச்சத்து மிக்க காய்களில்  முதன்மையானது. இந்த காய் கோடைக் காலத்தி உடலில் உள்ள  நீர்ச்சத்தை  குறையாமல் பாதுகாக்கிறது. இதில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி,  போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இந்த காய்  உடல் சூட்டைத் தணிக்கிறது, சருமத்தை பாதுகாக்கிறது, உடல் எடையை குறைக்க உதவுகிறது, கண் ஆரோக்கியம், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது. இதன் சாறு வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அழிகிறது,  ஈறுகளில் ஏற்படும் நோய்களை குணமாக்குகிறது. இந்த காய் உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டதால் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

5.கோவைக்காய் (Ivy gourd Vegetables Benifits):

கோவைக்காய் (Courgette) - Platform Tamil

எளிமையாக கிடைக்கும் காய்களில் ஒன்று கோவைக்காய் (Ivy gourd Vegetables). இதில் வைட்டமின் ஏ இருக்கிறது. இந்த காயில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இந்த காயை தினமும் அதிகளவு உண்டு வந்தால் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான தேமல், படை, சொரியாசிஸ்,பொடுகு, முடி உதிர்வு,  சர்க்கரைநோய், சிறுநீரக கல், பல் சார்ந்த பிரச்சனைகள் போன்ற  அனைத்தையுமே குணமாக்குகிறது. கோவக்காய் சிலருக்கு தோல் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வாமை அறிகுறி இருப்பின் மருத்துவர் ஆலோசனையைப் பெற்று இந்த காயை சாப்பிவது நல்லது.

6.வாழைக்காய் (Raw Banana Benifits):

வாழைக்காய் (Raw Banana) - Platform Tamil

வாழைக்காய் (Raw Banana) நாம் பயன்படுத்தப்படும்  காய்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். வாழைக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6 ஆகியவை அதிகளவு உள்ளன. மேலும்  ஃபோலேட்டுகள், விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), முதலியவை காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம் ஆகியவை உள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதசத்து,  நார்ச்சத்து போன்றவையும் உள்ளன.வாழைக்காயில் ஸ்டார்ச் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது. இந்த ஸ்டார்ச் ஆனது கரையாத நார்ச் சத்தாகச் செயல் பட்டு, நேரடியாக ஜீரண மண்டலத்தை அடைகிறது. அங்கே உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதன் மூலம் வரும் நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது. அதீத பசி, மலச்சிக்கல், உடல் எடையை குறைக்க, சுறு சுறுப்பாக செயல்பட உதவுகிறது. இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. கண் பிரச்சனைகளை தீர்க்கிறது.

வாழைக்காயில் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இருந்தாலும் நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.ஏனெனில் வாழைக்காயில் மற்ற சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவுகளை விட அதிக கலோரிகள் உள்ளன. ஒரு வாழைக் காயில் சுமார் 90 கலோரிகள் இருக்கின்றது. இந்த காயை வாயு பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது

7.கத்தரிக்காய் (Brinjal Vegetables Benefits):

கத்தரிக்காய் (Brinjal) - Platform Tamil

கத்திரிக்காயில் (Brinjal Vegetables) வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. இந்த காய் நரம்புகளை வலுவாக்கவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. இது சிறுநீரகக் கற்களைக் கரைக்கிறது. மேலும்  தொண்டைக்கட்டு, சளி, ஆஸ்துமா, பித்தம், ஈரல் நோய்கள், கீல்வாதம்,  உடல் பருமன், மலச்சிக்கல், வாதநோய்,  கரகரப்பானகுரல், போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. இதில் போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கிறது. உடல் பருமனைக்  குறைக்கிறது. மூளை செல்களையும் பாதுகாக்கிறது. தக்காளிக்கு இணையானது இந்த காய் என்று சொல்லப்படுகிறது . ஏனெனில் தக்காளியில் இருப்பதை போல  எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. இந்த காயை புண், ரணம் கொண்ட சரும பிரச்சனை உடையவர்கள் சாப்பிடக்கூடாது ஏனெனில் இது அரிப்பை தூண்டும். அறுவை சிகிச்சை செய்தவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு இந்த காயை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

8.மாங்காய் (Mango Benefits):

மாங்காய் (Mango) - Platform Tamil

அதிக ஊட்டச்சத்து செறிவுடைய பழங்களில் ஒன்று மாம்பழம். இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ இருக்கிறது. மாம்பழத்தை விட மாங்காய் உடலுக்கு மிகவும் நல்லது.  மாங்காய் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். உடல் எடையை குறைப்பதற்கு மாங்காயில் உள்ள கலோரிகள் பயன்படுகின்றது. இது  கல்லீரல் பாதிப்புக்கு ஒரு சிறந்த மருந்தாகும். மாங்காய் சாப்பிடுவதன் மூலம் பித்தநீர் சுரப்பு அதிகரிக்கிறது, குடலில் ஏதேனும் பாக்டீரியா தொற்றுகள் இருந்தால் அதனை சரி செய்ய மாங்காய் பயன்படுகிறது. செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். உணவில் மாங்காயை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.  மேலும் இது பசியைத் தூண்டும் ஒரு சிறந்த காயாகும். இந்த காயை சர்ம நோய் உள்ளவர்களும் வயிற்றுவலி உள்ளவர்களும் சாப்பிடக்கூடாது.

9.பீர்க்கங்காய் (Luffa Vegetables Benefits):

பீர்க்கங்காய் (Luffa) - Platform Tamil

பீர்க்கங்காய் (Luffa Vegetables) வெள்ளரி இனத்தை சேர்ந்த ஒரு வகை காயாகும். புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின், ரிஃபோபிளவின், தயாமின், நிகோடின், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் இருக்கின்றன.  பிஞ்சு பீர்க்கங்காயை விட முற்றிய பீர்க்கங்காயே உணவுக்குச் சிறந்தது. பீர்க்கங்காய் சற்று பருமனான உடல் வாகு கொண்டவர்களுகும், நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற காயாகும். இது உடலுக்குக் குளிர்ச்சியை தரும் இதனால் இரவில் சாப்பிடக் கூடாது.

இருமல், சளி, தலைவலி பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த காயை எப்பொழுதும் சாப்பிடக் கூடாது ஏனென்றால் தலையில் நீர்க் கோர்த்துக் கொள்ளும். மேலும்  பிஞ்சு பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் பித்தக் கோளாறுகள், சளி பிரச்சனைகள், முடக்கு வாதம், முதுகுவலி போன்றவை தோன்றும். இந்த காயை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. அளவு அதிகமானால் சீதளம், பித்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

10.கொத்தவரங்காய் (Cluster beans Vegetables Benefits):

கொத்தவரங்காய் (Cluster beans) - Platform Tamil

அதிகம் மக்களால் உண்ணப்படாத ஒரு சில காய்களில் கொத்தவரங்காயும் (Cluster beans Vegetables) ஒன்று. இந்த காயை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு காணலாம். இதில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட்ஸ் ஆகியவை இதயத்துக்கு வரக்கூடிய பல்வேறு நோய்களிலிருந்து  பாதுகாக்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த காய் ஓர் சிறந்த மருந்தாகும். தாய்மார்களுக்கு தேவையான இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் கொத்தவரையில் மிகுதியாக உள்ளது.

இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த ஓட்டம் சீர் பெற உதவும். கொத்தவரையில் உள்ள இரும்பு சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய உதவுகிறது. இந்த காயில் நார்ச்சத்து நிறைதுள்ளது . திடீரென அதிக அளவு நார்ச்சத்தை உண்டால் வாயு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும். எனவே, கொத்தவரங்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த காய்க்கு எப்பொழுதும் நோய் தீர்க்கும் தன்மையானது குறைவு. எனவே இந்த காயை உடலின் தன்மைக்கு ஏற்ப பயன்படுத்துவது நல்லது.

11.புடலங்காய் (Snake gourd Vegetables Benefits):

புடலங்காய் (Snake gourd) - Platform Tamil

புடலங்காயில் (Snake gourd Vegetables) வைட்டமின் ஏ, புரதம், கந்தகச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்றவை உள்ளது. புடலங்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் பயன்கள் நிறைய கிடைக்கும். உடலுக்கும் வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் பருமனடையும். குடல் புண்ணை சரிசெய்யும். தொண்டைப்புண்,  வயிற்றுப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பாதிப்புகள் குறையும். இக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கிறது ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. சருமத்திற்கும் பளபளப்பைக் கொடுக்கும்.  யாரெல்லாம் இந்த காயை சாப்பிடக்கூடாது என்றால் ஆஸ்துமா, சளி, காய்ச்சல் உள்ளவர்கள் மற்றும் மூட்டுவலி, தலைவலி போன்ற உடல் வலிகளை உடையவர்கள் சாப்பிட கூடாது

Latest Slideshows

Leave a Reply