Vegetables To Eat On Summer Days: கோடையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய 8 காய்கறிகள்

கோடையில் நிலவும் அதிக வெப்பத்தால் உடலில் நீர் இழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். நீர் இழப்பால் உடல் எளிதில் வறட்சி அடையக் கூடும். போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால் உடல் உறுப்புகள் தனது வேலைகளை சரிவர செய்ய இயலாது. சிறுநீரகம் சரிவர செயல் பட, மூளை செயல் பட, குடல் இயக்கம் சிறப்பாக இருக்க இப்படி உடல் உறுப்புகள் தனது வேலைகளை செய்ய உடலில் போதுமான நீர்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக கோடையில் ஏற்படும் அதிக உடல் வறட்சியால் சருமம் வறண்டு போகும்.

அடிக்கடி தலைவலி ஏற்படும், நீர்க்குத்தல் ஏற்படும். பொதுவாக நீர்ச்சத்தைப் பெற அதிகம் தண்ணீர் குடிப்பதோடு நீர்ச்சத்துள்ள காய்களையும் கோடையில் அதிகம் சேர்த்துக் கொள்வது மிக முக்கியம் அந்த வகையில் இந்த பகுதியில் பார்க்கப்போகும் இந்த 8 வகையான காய்கள் நீர்ச்சத்து கொடுப்பதோடு, ஏராளமான நார்ச்சத்து மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளையும் தரக்கூடியது. மேலும் இந்த 9 வகையான காய்களும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் பயன்தரக்கூடியது.

8 Vegetables To Eat On Summer Days

1.தக்காளி

அதிக நீர்ச்சத்து நிறைந்துள்ள காய் தக்காளி இதை தினமும் பச்சையாக சாப்பிட்டுவருவது நல்லது. இதனால் நமக்கு நீர்ச்சத்து கொடுப்பதோடு மட்டுமில்லாமல் முக்கிய நன்மைகளையும் தருகிறது. இதில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிப்பு சக்தியை கொடுப்பதோடு, இதயத்திற்கு மிகவும் நல்லது. முக்கியமாக இது உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது. சரும ஆரோக்கியம் மற்றும் கண்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதே போன்று இதில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் நமது எலும்பை உறுதியாகவும், திடமாகவும் மாற்றுகிறது. முக்கியமாக இந்த தக்காளியில் குரோமியம் சத்து வளமாக உள்ளதால் அது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

2.கேரட்

நீர்ச்சத்து நிறைந்துள்ள இதையும் தினமும்  ஒன்று பச்சையாக சாப்பிட்டு வருவது நல்லது. அனைவருக்கும் பிடித்த சுவையான காய்களில் ஒன்று. வைட்டமின் ஏ சத்து நிறைந்த இது கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதோடு, ஆன்டிஆக்சிடண்ட், வைட்டமீன்கள் மற்றும் புரோட்டீனும் அதிகமுள்ளது. இது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும், முடிக்கும் மிகவும் நல்லது.

3.முள்ளங்கி

நீர்ச்சத்துள்ள முள்ளங்கியை கோடையில் அடிக்கடி உணவில் சேர்த்துவருவது நல்லது. உடலில் இருந்து  வெளியேறிய நீரை மீண்டும் பெற உதவும். மேலும் இவை எளிதில் செரிமானம் அடைவதால் அஜீரண கோளாறு ஏற்படுவதையும் தடுக்கலாம். முள்ளங்கி சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை சீராகும், சிறுநீரக தொற்றை சரி செய்யும், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் மேலும் இந்த முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.  

4.சுரைக்காய்

சுரைக்காய் இது அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகளும் அதே சமயம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. கோடையில் அடிக்கடி சுரைக்காய்களை கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடல் சூடு குறைவதோடு வெப்ப நோய்களை தடுக்க உதவும். மேலும் சொரைக்காயை சாப்பிட்டுவந்தால் குடல் புண் ஆரும், செரிமானம் சீராகும், அஜிரணம், வாயுத்தொல்லைப் போன்ற பிரட்சனைகள் இருக்காது. முக்கியமாக இதில் கார்போஹைய்ட்ரேட் இல்லை என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்த காயாகும்.

5.வெண்பூசணிக்காய்

பூசணி வகையில் இந்த வெண்பூசணிக்காயில் அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே கோடைகாலத்தில் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் உடலை வறட்சி இன்றி வைத்துக்கொள்ளலாம். முக்கியமாக உடல் சூட்டினால் அவதிப்படுகிறவர்கள் வெண்பூசணி சாற்றை குடித்து வந்தால் உடல் சூட்டை தனிப்பதோடு உடலில் நீர்ச்சத்து அதிகரித்து உடலை குளிர்ச்சியுடன் வைத்து கொள்ளலாம்.

6.முட்டைகோஸ்

முட்டைகோஸில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் கோடைக்கேற்ற காயாகும். இதிலுள்ள வைட்டமின் ஏ கண்பார்வை தெளிவாக தெரியவும் மற்றும் இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் சரும வறட்சி, தலை முடி உதிர்வு, உடல் சூடு, தொற்று நோய்கள் இவற்றை சரி செய்யவும் உதவுகிறது. மேலும் செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு செயல்களுக்கும் உதவுகிறது.

7.வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் வறட்சியும், மலச்சிக்கலும் ஏற்படாது. வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்து ஒட்டுமொத்த உடலையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். முக்கியமாக புகை பிடிப்பவர்களின் குடலை பாதுகாக்கும். நிகோடின் என்னும் நச்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உள்ளது. அதே போன்று வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்கு குளிர்ச்சியும் மூளைக்கு புத்துணர்ச்சியும் கொடுக்க கூடியது இந்த வெள்ளரிக்காய். இதிலும் கலோரிகள் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய ஒன்று.  

8.சௌ சௌ

அதிக நார்ச்சத்து, நீர்ச்சத்து கொண்ட இதில் புரோட்டீன், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாஷியம் போன்றவை வளமாக உள்ளது. கொடைக்கு ஏற்ற அருமையான காயாகும். இந்த சௌ சௌ நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய் என்பதால் சிறுநீரக சம்பந்தமான நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும். இதில் குறைந்த கலோரிகள், கொழுப்பு இல்லாததால் உடல் எடையை குறைக்க உதவும். மேலும் இதிலுள்ள அதிக நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். எனவே கோடையில் தவிர்க்காமல் இந்த காய்களை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் நீர்ச்சத்து குறைப்பாட்டை தடுப்பதோடு உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். முக்கியமாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மைகளை தரக்கூடிய காய்களாகும்.    

Latest Slideshows

Leave a Reply