Vetrimaaran Gifts Gold Coin: தங்கக் காசை பரிசளித்த வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் முதல்படம் நேற்று வெளியானது. சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன், மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து “விடுதலை” படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் வெற்றிமாறன் படக்குழுவினருக்கு தரமான பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார். உதவி இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வெற்றிமாறன் பரிசு வழங்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள “விடுதலை” படத்தின் முதல் பாகம் நேற்று வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளிலேயே படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்ததுடன் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Vetrimaaran Gifts Gold Coin to Viduthalai Cast & Crew

விடுதலை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த வெற்றியை இயக்குனர் தனது படக்குழுவினருடன் கொண்டாடி வருகிறார். அதன்படி விடுதலை படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் “தங்கக் காசுகளை” பரிசாக (Vetrimaaran Gifts Gold Coin) வழங்கியுள்ளார். வெற்றிமாறன் தங்க நாணயம் பரிசளிக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அனைவருமே உயிரை கொடுத்து உழைத்து வெற்றிமாறன் உட்பட அனைவரையும் திரையில் பார்ப்பது பிரமிப்பாக உள்ளது என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன்படி விடுதலை படக்குழுவினருக்கு இயக்குனர் வெற்றிமாறன் தங்க நாணயம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் முன்னதாக அவர் தனது உதவி இயக்குனர்களுக்காக “நிலம்” வாங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பகுதியில் தன்னிடம் பணிபுரியும் 25 உதவி இயக்குநர்களுக்கு ஒரு கிரவுண்ட் இடம் வாங்கிக்கொடுத்துள்ளார். அந்த நிலத்தை விற்கவே கூடாது என வெற்றிமாறன் அன்பு கட்டளை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. உதவி இயக்குனர்களுக்கு பைக், கார் போன்றவற்றை வாங்காமல் நிலம் வழங்கியது பலரது கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply