Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்

வேட்டையன் திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் (நேற்று) அக்டோபர் 10 ஆம் தேதி வெளியானது. இது சூப்பர் ஸ்டாரின் 170வது படம். படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தினை பாராட்டி வருகின்றனர். இயக்குநர், ரஜினிகாந்தை வைத்து சமூக அக்கறையுடன் படம் எடுத்துள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் (Vettaiyan Box Office Day 1) குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

படத்தின் கதை :

வேட்டையன் படத்தின் கதையைப் பொறுத்தவரையில் நீட் தேர்வினால் உயிரிழக்கும் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள், நீட் தேர்வினால் பாதிக்கப்படுபவர்களின் குரலை திரைமொழியில் காட்டியுள்ளனர். இயக்குநர் ஞானவேல், இந்த படத்திற்கு ரஜினிகாந்த்தை தேர்வு செய்தது பாராட்டுக்குரியது. மேலும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரியாக ரஜினி மாற்றப்பட்ட பின்னரும்கூட, வில்லனுக்கு எந்த வகையில் தண்டனை பெற்றுத் தரலாம் என கதையை நகர்த்திய விதம் அருமை.

வேட்டையன் விமர்சனம் :

இசைமைப்பாளர் அனிருத் படத்தில் தனக்கான வேலையை சரியாக செய்யவில்லை என்றாலும், குறை கூறும் அளவிற்கு செய்யவில்லை. அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகள் பாராட்டுகளைப் பெறுகின்றது. படத்தில் ரஜினிக்கு பல இடங்களில் மாஸ் காட்சிகள் இருக்கிறது. குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் சூப்பர் ஸ்டார் ஹெலிகாப்டரில் எண்ட்ரி கொடுக்கும் காட்சிகளுக்கு தியேட்டரே அதிர்ந்தது. படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. படத்தில் இடம் பெற்றிருந்த மனசிலாயோ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்தப் படத்தினை மக்கள் மத்தியில் எளிதாக கொண்டு சென்றது. இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்திற்கு முதல் நாளே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வருகின்றது. படம் முழுக்க ஒரு அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் பாராட்டுகளை பெறுகிறார் பகத் ஃபாசில். மேலும் கதையோட்டத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக கட்டமைக்கப்பட்டுள்ளதால், அதற்கான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். அமிதாப் பச்சன் போன்ற கைதேர்ந்த நடிகரின் கண் பார்வையில் இருந்து விரல் அசைவு வரை அனைத்தும் பெர்ஃபெக்ட்.

Vettaiyan Box Office Day 1 :

வேட்டையன் படமானது தமிழ்நாட்டில் மட்டும் 900 தியேட்டருக்கு மேல் வெளியானது. இது மட்டுமில்லாமல் படம் வெளிநாடுகளிலும் வெளியானது. இந்நிலையில் படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூபாய் 30 கோடிகளில் இருந்து 35 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் (Vettaiyan Box Office Day 1) என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இன்று அதாவது அக்டோபர் 11ஆம் தேதி விடுமுறை தினம், அதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு என வார இறுதி நாட்கள் இருப்பதால் வேட்டையன் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தும் என படக்குழு நம்புகின்றது. மேலும் முதல் நாளில் பாக்ஸ் ஆபீஸில் படம் எவ்வளவு வசூல் செய்தது என்பதை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Latest Slideshows

Leave a Reply