Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்

ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சியாக வெளியானது. அதிகாலையில் இருந்தே வேட்டையன் படத்திற்கு சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது, மேலும் படமும் பாசிட்டிவ்வாகவே உள்ளது. போலீஸ் அராஜகத்திற்கு எதிராக, ரஜினிகாந்தை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்க வைத்து என்கவுண்டரை ஆதரிக்கிறது. இந்தப் படத்தை வெளியிடவே கூடாது என்று சிலர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், வேட்டையன் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பற்றி என்ன பேசுகிறார்கள். த.செ.ஞானவேல் எவ்வளவு சமூக அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதைப் பார்த்தால் பாராட்டாமல் இருக்க முடியாது. வேட்டையன் கமர்ஷியல் படமா? கதை உள்ள படமா? (Vettaiyan Review) அதன் விரிவான மதிப்பாய்வை இங்கே காணலாம்.

வேட்டையன் கதைக்களம் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதியன் கதாபாத்திரத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ளார். ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் மாஸ் காட்சிகளை வைத்து தான் ரஜினி ரசிகன் என்பதை நிரூபித்த ஞானவேல், என்னிடம் நல்ல விசாரணைக் கதை இருக்கு என்பதை படமாக காட்டியிருக்கிறார். அதியம் மற்றும் அவரது மனைவி என்கவுண்டர் செய்தால் அந்தப் பழியும், பாவமும் அவர்களுடைய பிள்ளைகளுக்குத்தான் வரும் என்பதற்காக குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை என சொல்லும் இடத்திலேயே ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தை நன்றாக செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.

பள்ளியில் போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு எதிராக செயல்படும் துணிச்சலான ஆசிரியையாக நடித்த துஷாரா விஜயன் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார். அவருடைய வழக்கை விரைவாக முடிப்பதற்காக கற்பழித்ததாகக் கூறப்படும் நபரை வேட்டையாடுகிறார் வேட்டையன். ஆனால் நீதிபதி அமிதாப் பச்சன் ரஜினிகாந்திடம் இது என்கவுண்டர் இல்லை மர்டர் என்பதை சொல்லும் இடத்திலிருந்து இடைவேளை தொடங்குகிறது. அதன் பிறகு சரண்யா டீச்சர் வேடத்தில் நடித்த துஷாரா கொலை வழக்கை எப்படி கண்டு பிடிக்கிறார். உண்மையான வில்லன் யார்? ரஜினிகாந்த் அவரை சந்தித்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

வேட்டையன் விமர்சனம் (Vettaiyan Review) :

அமிதாப் பச்சன், என்கவுண்டர் சரியான தீர்வு அல்ல என்பதைக் காட்டும் பவரான நீதிபதியாக நடித்துள்ளார். குற்றவாளிகளை தண்டித்து குற்றங்களை குறைக்கும் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தின் நடிப்பு வேறு லெவல். வயதானாலும் சில மாஸ் காட்சிகளில் ரஜினிகாந்தை இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் காட்டியிருக்கிறார் இயக்குநர். பகத் ஃபாசிலுடன் ஆக்‌ஷன், பாட்டு, நடனம், நகைச்சுவை, ராணா டகுபதியுடன் ஆன்லைன் கல்வியில் ஊழல், தொழிலதிபர்கள் இந்த நாட்டையும் நீதித்துறையையும் எப்படி வளைக்கிறார்கள் என ஒவ்வொரு ஏரியாவிலும் தைரியமாக சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குநர் ஞானவேல். க்ளைமேக்ஸில் ரஜினிகாந்துக்கும் பேட்டரியாக நடிக்கும் பகத் பாசிலுக்கும் இடையிலான உணர்ச்சிகரமான காட்சியில் பகத் பாசில் ஸ்கோர் செய்துள்ளார். அவருக்கு ஹார்லிக்ஸ் கொடுக்கும் காட்சியில் ரித்திகா சிங்கின் மென்மையான காதல் உணர்வுகளும் சிறப்பு.

க்ளைமேக்ஸில் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பதை விட்டுக்கொடுக்காமல் ஞானவேல் தனது அறத்தை நிலைநாட்டியிருப்பதன் மூலம் படம் நீண்ட நாள் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். ஹீரோக்களுக்கு பில்ட்-அப் படமாக இல்லாமல் நல்ல கதைகளில் ஹீரோக்களை பயன்படுத்தும் போது தான் சூப்பர் ஸ்டாராக முடியும். அனிருத்தின் இசை படம் முழுக்க எங்கெல்லாம் அண்டர்ப்ளே செய்ய வேண்டுமோ அங்கெல்லாம் அடக்கி வாசித்துவிட்டு, ரசிகர்களை குதூகலப்படுத்த வேண்டிய இடத்தில் இறக்கி அடிக்கிறது. க்ளைமேக்ஸ் காட்சியில் அவருடைய BGM மற்றும் பாடல் அசத்துகிறது. அமிதாப் பச்சனை ஊறுகாய்க்கு தொடாமல், படத்திலும் அவருக்கான கேரக்டரை நன்றாக எழுதியிருக்கிறார், பக்ஸ் ஆக்ட் என எங்கு சொன்னாலும் படம் வேற லெவல் அப்ளாஸ் பெறுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காட்சிகள் அனைத்தும் குறி வச்சா இரை விழணும் வசனமும் மஞ்சு வாரியருக்கு கொடுத்த மாஸ் காட்சி படத்திற்கு பலம் சேர்கிறது. படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், மொத்தத்தில் தரமான படம். ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் தாராளமாக (Vettaiyan Review) பார்க்கலாம்.

Latest Slideshows

Leave a Reply