Vettaiyan Second Single Update : வேட்டையன் இரண்டாவது பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து முடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிளின் மேக்கிங் வீடியோவை (Vettaiyan Second Single Update) அனிருத் வெளியிட்டுள்ளார்.

வேட்டையன் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன் ஆகும். இப்படம் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியாகிறது. ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ராணா டகுபதி, அமிதாப் பச்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்து வருகின்றனர்.

செப்டம்பர் 18 ஆம் தேதி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக, வேட்டையனில் ராணா டகுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகிய இருவரின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் வேட்டையன் செகண்ட் சிங்கிளின் மேக்கிங் வீடியோவை அனிருத் (Vettaiyan Second Single Update) வெளியிட்டுள்ளார். தற்போது வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில வாரங்களுக்கு முன் படத்தின் டப்பிங் வேலையை முடித்தார். படத்தின் பின்னணி இசை வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Vettaiyan Second Single Update :

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் மனசிலாயோ பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நுழைந்தால் மனசிலாயோ பாடலின் ரீல்ஸ் வீடியோக்கள் லட்சக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. இந்நிலையில் அடுத்த பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அந்த வகையில் ‘ஹண்டர் வந்துட்டார்’ என்கின்ற பாடலை பாடும் மேக்கிங் வீடியோவை (Vettaiyan Second Single Update) அனிருத் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராணா டகுபதி மற்றும் ஃபகத் பாசில் இவர்களின் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராணா டகுபதி நட்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் மாஸாக இருப்பதால் வில்லனாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. ஃபகத் பாசில் படத்தில் பேட்ரிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply