Vidaamuyarchi Movie Review : விடாமுயற்சி திரைப்படத்தின் திரை விமர்சனம்

அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியாகி (Vidaamuyarchi Movie Reiew) ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

விடாமுயற்சி

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித் குமார். 2023-ல் இவரது நடிப்பில் வெளியான துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைக்கு (Vidaamuyarchi Movie Review) வந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் காண அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். விடாமுயற்சி திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சியை திரையிட்டுக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அஜித் ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் விடாமுயற்சி படம் குறித்த அப்டேட்களை கேட்டு வருகின்றனர். அதற்கு விடையாக விடாமுயற்சி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர், டீசர், புகைப்படங்கள் என என்னென்ன அறிவிப்புகள் வந்தாலும் விடாமுயற்சி படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வந்தனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

விடாமுயற்சி கதைக்களம்

அர்ஜுன் (அஜித் குமார்) மற்றும் கயல் (த்ரிஷா) இருவரும் 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொள்கின்றனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, கயலுக்கு இன்னொருவர் மீது காதல் ஏற்படுவதால் அர்ஜுனை விவாகரத்து (Vidaamuyarchi Movie Review) செய்ய முடிவு செய்கிறாள். விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டு, விவாகரத்து வழக்கு முடியும் வரை அம்மா வீட்டிற்கு போறேன் என்று சொல்ல, சாலை வழியாக காரில் செல்லலாம் என்றும் கூறுகிறார். கடைசி ரோடு ட்ரிப் என அழைத்துச் செல்லும் அஜித்தின் கார் பிரேக்டவுன் ஆக, உதவ வரும் ரெஜினா கசாண்ட்ரா ஜோடி த்ரிஷாவை கடத்த, அதற்கு பின்னணியில் இருப்பது யார்? காணாமல் போன தனது மனைவியை அஜித் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

விடாமுயற்சி திரை விமர்சனம் (Vidaamuyarchi Movie Review)

Vidaamuyarchi Movie Review - Platform Tamil

12 வருடங்களுக்கு முன் அஜித்தும், த்ரிஷாவும் காதலிக்கும் காட்சிகள் மற்றும் சவதீகா பாடல் வரை  தியேட்டரில் ரசிகர்கள் “கடவுளே அஜித்தே” என்று கோஷமிட்டனர், ஆனால் அந்த பாடல் முடிந்து த்ரிஷா அஜித்தை டைவர்ஸ் பண்ணப் போகிறேன் என்று சொன்னவுடன், ரசிகர்கள் (Vidaamuyarchi Movie Review) அமைதியாகிவிட்டனர், இடைவேளை காட்சியில் கூட ஆர்வம் இல்லாமல் படம் ஸ்லோ மோஷனில் நகர்ந்தது. இது படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ராவும் நன்றாக நடித்தாலும் படத்தில் வரும் கதாபாத்திரங்களே அவர்கள் சொல்வதை நம்புவதாக தெரியவில்லை. பார்வையாளர்கள் எப்படி நம்புவார்கள் என்று இயக்குநர் யோசித்து இப்படிச் சேர்த்தாரா என்பது தெரியவில்லை.

அஜித் மட்டும் தான் படத்தை முடிந்தவரை தாங்கி பிடித்திருக்கிறார். ஆரவ், அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா அனைவரும் அவரை அடிக்கும் போது ரசிகர்களுக்கே ரத்தம் கொதிக்கிறது. அஜீத் குமாரின் தலைமுடியை இழுப்பது, பூமர் என்று சொல்லி அசிங்கப்படுத்துவது போன்ற காட்சிகளில் (Vidaamuyarchi Movie Review) அஜித் அண்டர்ப்ளே செய்து நடித்திருப்பது பெரிய ப்ளஸ் தான். இடைவேளைக்குப் பிறகும் அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும் கார் ஸ்டண்ட், ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்திலும் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.

Latest Slideshows

Leave a Reply