Vidaamuyarchi Movie Update : விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியீடு

லைகா நிறுவனம் அஜித், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களை தயாரித்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தப் போகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லால் சலாம் படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் பலர் சமீபத்தில் சந்தித்தபோது கூட, ஹீரோக்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கலந்து கொள்ளவில்லை. அதிகம் எதிர்பார்த்து இருவரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இன்ச் கூட நகராமல் (Vidaamuyarchi Movie Update) அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு நிறுத்தம் :

கடந்த ஆண்டு மே மாதம், அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. அதையடுத்து த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் தகவல்கள் வெளியான நிலையில், முழுக்க முழுக்க அஜர்பைஜானில் படமாக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், குறிப்பிட்ட பட்ஜெட்டை தாண்டிவிட்டதால் இனி செலவு செய்ய முடியாது என்ற முடிவுக்கு லைகா நிறுவனம் வந்த நிலையில் தான் அர்பைஜானில் இருந்து ரிட்டர்ன் ஆனதாக கூறப்படுகிறது. படத்துக்காக நடிகை த்ரிஷா கொடுத்த கால்ஷீட் எப்போதோ முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. த்ரிஷா தற்போது செர்பியாவில் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்‘ படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவியின் விஷ்வம்பரா படத்திலும் கமிட் ஆகி ஒரு ஷெட்யூல் நடித்திருக்கிறார் த்ரிஷா. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்கள் (Vidaamuyarchi Movie Update) ஆகும் போது தான் அடுத்த படங்களுக்கு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

Vidaamuyarchi Movie Update - பேச்சுவார்த்தையில் இயக்குனர் :

லைக்கா நிறுவனம் ஏற்கனவே நிறைய செலவு செய்துள்ள நிலையில், படத்தை சென்னையில் அமைக்கச் சொன்னதாகவும், அஜர்பைஜானில் படமாக்கினால்தான் அவுட்புட் கிடைக்கும் என்றும் இயக்குனர் கூறியுள்ளார். பேச்சுவார்த்தைக்கு லைகா சம்மதம் தெரிவித்தால் மட்டுமே படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி (Vidaamuyarchi Movie Update) இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply