Vidaamuyarchi New Poster Released : விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் புதிய போஸ்டர்கள் வெளியாகி (Vidaamuyarchi New Poster Released) இணையத்தில் பரவி வருகிறது. நடிகர் அஜித், இந்த இரண்டு புகைப்படங்களில் ஸ்டைலாக உள்ளார்.

விடாமுயற்சி :

துணிவு படத்திற்கு பிறகு அஜித் விடாமுயற்சி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதைத் தொடர்ந்து இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது. தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக திகழும் நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம், தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது சில சூப்பர் அப்டேட்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

சில காரணங்களால் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பிஸியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக வதந்தி பரவி வைரலான நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்த வீடியோவை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். இதன் மூலம் விடாமுயற்சி படம் கைவிடப்படவில்லை என்பதை உறுதி செய்தது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர்கள் (Vidaamuyarchi New Poster Released) வெளியாகியுள்ளன. இரண்டு போஸ்டரிலும் அஜித் ஸ்டைலாக இருப்பதை பார்க்க முடிகிறது.

Vidaamuyarchi New Poster Released :

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, இசைமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் போஸ்டர் (Vidaamuyarchi New Poster Released) வெளியாகியுள்ளது. Efforts Never Fail என்ற ஆங்கில வார்த்தையும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. அதாவது, முயற்சிகள் எப்போதும் தோற்பதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வெளியான 2 போஸ்டரில் முதல் போஸ்டரில் துப்பாக்கியும், 2வது போஸ்டரில் கார் ஓட்டும் காட்சியும் இருப்பதை பார்க்க முடிகிறது.

Latest Slideshows

Leave a Reply