Vidaamuyarchi Release Date Update : விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிப்பு

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பொங்கலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக (Vidaamuyarchi Release Date Update) தகவல் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி :

அஜித் படம் ஒன்று வெளியானால் அஜித் ரசிகர்கள் அந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைகிறார்களோ அதே அளவிற்கு வருந்தவும் செய்கிறார்கள். அஜித்தின் படம் குறித்த அறிவிப்புகளுக்காக வருடங்கள் காத்திருக்கின்றன. அப்படி துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் தான் விடாமுயற்சி. தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் தலைப்பு கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அஜர்பைஜான், துபாய் உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்படத்தில் த்ரிஷா, ஆரவ், ரெஜினா, அர்ஜுன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு ஓம் பிரகாஷ் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

படத்தின் தலைப்பைத் தவிர எந்த தகவலும் இல்லாதது அஜித் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. இந்நிலையில், படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் விபத்தில் உயிர் இழந்தார். இந்த செய்தியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அப்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பு வெளியானது. அப்போது ரசிகர்கள் விடாமுயற்சி இவ்வளவு தானா என்று கேள்வி எழுப்பினர். படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்குப் பிறகு, படக்குழு படத்தைப் பற்றிய சிறிய அப்டேட்களை ரசிகர்களுக்கு வழங்கத் தொடங்கியது.

Vidaamuyarchi Release Date Update - விடாமுயற்சி ரிலீஸ் ஒத்திவைப்பு :

சில இடைவேளைகளுக்குப் பிறகு விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி முடிவுக்கு வந்தது. தற்போது ஒரு சில வேலைகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விடாமுயற்சி படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு கடந்த ஆண்டு முதல் கூறி வருகிறது. மேலும் சமீபத்தில், படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு இழந்த ரசிகர்களின் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது படக்குழு.

தற்போது படம் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது விடாமுயற்சி படம் பொங்கலுக்கு தள்ளிப்போவதாக செய்திகள் (Vidaamuyarchi Release Date Update) வெளியாகியுள்ளன. இந்த தகவல் அஜித் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. கமலின் தக் லைஃப் படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் அஜித் மற்றும் கமல் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply