Vidaamuyarchi Release Date : விடாமுயற்சி ரிலீஸ் தேதியை உறுதி செய்த சுரேஷ் சந்திரா

நடிகர் அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அஜித் மற்றும் படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ள நிலையில், இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் (Vidaamuyarchi Release Date) வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த ஆண்டு பொங்கல் திருநாளில் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.

துணிவு படம் ரிலீஸ் ஆனபோது விஜய்யின் வாரிசு படமும் வெளியானது. இதனால் அந்த பொங்கலை தல மற்றும் தளபதி ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். துணிவு படம் முடிந்ததும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இந்த படத்தின் படப்பிடிப்பு 70 முதல் 80 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளதாலும், இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஜூன் 24-ல் படப்பிடிப்பு தொடக்கம் :

இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்தார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது அதில் அஜித் மற்றும் ஆரவ் உயிர் தப்பி வந்தனர். இது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், படத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ‘விடாமுயற்சி‘ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கும் என கூறப்பட்டது.

அதன்படி இறுதிக்கட்ட படப்பிடிப்பில் த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் ஆகியோர் நடிகர் அஜித்துடன் அஜர்பைஜானில் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 24 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையமைத்துள்ளார்.

Vidaamuyarchi Release Date - தீபாவளிக்கு வெளியாகும் விடாமுயற்சி :

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, விடாமுயற்சி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினரும் அஜித்தும் அஜர்பைஜான் சென்றுள்ளதாகவும், படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை விறுவிறுப்பாக முடித்துவிட்டு வரும் தீபாவளி அன்று இந்த படத்தை வெளியிட படக்குழு (Vidaamuyarchi Release Date) திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படம் தீபாவளிக்கு வெளியாவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு அஜித் நடித்த வேதாளம் தீபாவளிக்கு வெளியானது, இதனை தொடர்ந்து அஜித்தின் படங்கள் எதுவும் தீபாவளிக்கு வெளியாகவில்லை. தற்போது, ​​ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் விடாமுயற்சி படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply