Vidaamuyarchi Ticket Booking : ப்ரீ புக்கிங்கில் கெத்து காட்டும் விடாமுயற்சி

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் 6-ம் தேதி வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தை லைகா புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது. இப்படத்தின் முன்பதிவு நேற்று முதல் (Vidaamuyarchi Ticket Booking) தொடங்கியுள்ளது. தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் பல திரையரங்குகளில் பெரும்பாலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடாமுயற்சி

அஜித்குமார், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது. இப்படம் ப்ரேக் டவுன் என்ற ஆங்கில படத்தின் தழுவல் (Vidaamuyarchi Ticket Booking) என்று கூறப்படுகிறது. ஆனால், இது உண்மையா பொய்யா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் படக்குழு தரப்பிலிருந்து வெளியாகவில்லை. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் என ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் கடைசியில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தினை திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியிட முடியவில்லை. படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவற்றைப் பார்க்கும் போது, ​​படத்தின் பெரும்பகுதியில் அஜித்திற்கு ஒரே மாதிரியான காஸ்ட்யூம் என்பது புரிகிறது. இதுமட்டுமின்றி படம் அஜித்தின் வழக்கமான படமாக இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட படமாக (Vidaamuyarchi Ticket Booking) எடுக்க வேண்டும் என திட்டமிட்டு படக்குழு இந்த படத்தினை எடுத்துள்ளது. படத்தில் அர்ஜுன் மற்றும் ஆரவ் வில்லன்களாக நடித்துள்ளனர். படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லரைப் பார்க்கும்போது, ​​ஹாலிவுட்டுக்கு இணையாக ஒளிப்பதிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி ப்ரீ புக்கிங் (Vidaamuyarchi Ticket Booking)

Vidaamuyarchi Ticket Booking - Platform Tamil

இப்படத்திற்கான முன்பதிவு நேற்று அதாவது பிப்ரவரி 2-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் மல்டி ஸ்கிரீன், சிங்கிள் ஸ்கிரீன் என கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் (Vidaamuyarchi Ticket Booking) இப்படம் வெளியாகயுள்ளது. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் முன்பதிவு தொடங்கியதில் இருந்தே பல காட்சிகளுக்கான  டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறப்புக் காட்சியில் படத்தைத் திரையிட தமிழக அரசு இதுவரை அனுமதி வழங்காததால், 9 மணி காட்சிகள் மற்றும் 10 மணி நேர காட்சிகளின் ஸ்லாட்கள் ஓபன் செய்யப்படவில்லை. ஆனால், இப்படத்திற்கான முன்பதிவுகள் இதுவரை நல்ல வசூலை பெற்றுள்ளது. ப்ரீ புக்கிங்கில் மட்டும் சுமார் 25 கோடி முதல் 30 கோடி வரை வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது. இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அஜித்தின் முந்தைய படங்களின் முன்பதிவு வசூலை விட இந்த வசூல் அதிகம் என்பதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply