Vidaamuyarchi : அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு

Vidaamuyarchi படப்பிடிப்பில் பிஸியாக இருந்த அஜித், கடந்த மாத இறுதியில் சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதால் படக்குழுவினர் அஜித்திற்காக காத்திருக்கின்றனர். தற்போது அஜித் படப்பிடிப்பிற்காக கிளம்பியுள்ளார்.

Vidaamuyarchi :

அஜித்தின் 62வது படமாக Vidaamuyarchi உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இந்த பிரமாண்ட படத்தை மகிழ் திருமேனி இயக்க, இசைமைப்பாளர் அனிருத் இசைமைக்கிறார். முன்னதாக விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்கவிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்தது. அஜித்தின் விருப்பமான இயக்குனர்களான வெங்கட் பிரபு, விஷ்ணுவர்தன் என ரசிகர்களின் எதிர்பார்ப்பில் காத்திருக்க, ஆனால் இந்த படத்தில் மகிழ் திருமேனி இணைவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சூப்பர் ஹிட் படங்களினால் அவுட்டாகிருந்த அருண் விஜய்க்கு கம்பேக் கொடுக்க வைத்தார். இதனால் அஜித்-மகிழ் திருமேனி கூட்டணியும் செம்ம மாஸ் காட்டும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரியா பவானி சங்கர், ரெஜினா ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இவர்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்ஷன் ஜானரில் உருவாகும் Vidaamuyarchi, அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு :

இந்நிலையில், அஜர்பைஜானில் கடந்த மாதம் தொடங்கிய Vidaamuyarchi படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடந்தது. அதன்பிறகு கடந்த சில நாட்களாக இடைவேளை விடப்பட்ட நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இது அஜர்பைஜான் நாட்டிலும் அதன் சுற்றுப்புற பகுதிகள் படப்பிடிப்பு நடைபெறும். இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஆவலுடன் காத்திருக்கிறது. இந்த ஷெட்யூல் தொடர்ச்சியாக 70 நாட்கள் வரை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்படுகின்றன. இதற்காக சென்னையில் இருந்து அஜித் அஜர்பைஜான் கிளம்பியுள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்ட அஜித், தனது மகன் ஆத்விக்குடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். சென்னை மழையின் போது அமீர்கான், விஷ்ணு விஷால் ஆகியோருக்கும் உதவி செய்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்ற அஜித்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது, மேலும் ரசிகர்களும் அஜித்துடன் போட்டோ எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் புத்தாண்டு ஸ்பெஷலாக டிசம்பர் 31 அல்லது ஜனவரி 1ம் தேதி Vidaamuyarchi ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் தளபதி 68 படத்தின் டைட்டல், ஃபர்ஸ்ட் லுக்கும் ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply