Vidamuyarchi Teaser : விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியீடு

ரிலீஸ் அறிவிப்புடன், அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் (Vidamuyarchi Teaser) வெளியாகியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள்  கொண்டாடி வருகின்றனர்.

விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடித்தார். மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். நடிகர்கள் அர்ஜுன் மற்றும் ஆரவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள விடாமுயற்சி படத்தின் (Vidamuyarchi Teaser) டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விடாமுயற்சி டீசர் (Vidamuyarchi Teaser)

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த டீசரின் தொடக்கத்தில் அர்ஜுன் கும்பல் ஒரு மனிதனை காரின் டிக்கியில் இருந்து வெளியே இழுக்கிறது. இதைத் தொடர்ந்து ஹீரோ அஜித்தின் அறிமுகம் தொடங்கி திரிஷா போன்ற கேரக்டர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளாகவே காட்சிகள் விரிகின்றன. டீசரில் அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கார் சேஸ் மற்றும் அதிரடி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் ஹாலிவுட் த்ரில்லர் பாணியில் காட்சியமைப்பும் நம்பிக்கை அளிக்கிறது. இருந்தாலும் டீசரை இன்னும் (Vidamuyarchi Teaser) கொஞ்சம் சுவாரசியமாக  கட்  செய்திருக்கலாம்  என்ற எண்ணம் எழுந்துள்ளது.

வெறும் காட்சிகளின் தொகுப்பாக இருப்பதால், படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க டீசரில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதுவும் இல்லை. அஜீத் வழக்கம் போல் ஸ்டைலான லுக்கில் இருக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்று கூறப்படும் ஆரவ் டீசரில் இடம்பெறவில்லை. அனேகமாக முதல் காட்சியில் அர்ஜுன் டீம் இழுத்து போட்ட அந்த நபர் ஆரவ் ஆக இருக்கலாம். அனிருத்தின் பின்னணி இசை கவனத்தை ஈர்க்கிறது. ஓம் பிரகாஷின் கேமரா ஒரு த்ரில்லருக்கு அடர்த்தியான காட்சிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply