Viduthalai 2 First Look : விடுதலை 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Viduthalai 2 First Look) வெளியாகியுள்ளது.

விடுதலை :

வெற்றிமாறன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான படம் விடுதலை ஆகும். இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, சேதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 4.5 கோடியில் படத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். படப்பிடிப்பு தொடங்கிய பிறகு கதையை விரிவுபடுத்த வேண்டிய தேவை அதிகமாகி படத்தின் பட்ஜெட் அதிகமாகியது. 4.5 கோடியில் தொடங்கிய விடுதலை படம் சுமார் 60 கோடியைத் தொட்டது.

மேலும் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்தது. விடுதலை முதல் பாகம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சூரி இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Viduthalai 2 First Look :

முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கேரக்டரில் முதல் பாகத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும், இரண்டாம் பாகத்தில் அவரது காட்சிகள் அதிகம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் (Viduthalai 2 First Look) விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியரின் இளமைக்கால காதல் காட்சிகள் இடம்பெறும் என்பதை உறுதி செய்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் இளையராஜா இசையமைத்த “உன்னோட நடந்தா” மற்றும் “காட்டுமல்லி” ஆகிய இரண்டு பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்தில் இளையராஜாவின் இசையைக் கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply