Viduthalai 2 Movie VFX Technology : புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வெற்றிமாறன்

Viduthalai 2 Movie VFX Technology :

இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் வெங்கட் பிரபுவைத் தொடர்ந்து, வெற்றிமாறன் தனது விடுதலை 2 திரைப்படத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் (Viduthalai 2 Movie VFX Technology) வெளியாகியுள்ளன. அதாவது விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார் இருவரையும் இளமையாக காட்ட இயக்குனர் வெற்றிமாறன் டீஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, விடுதலை படத்தின் மூலம் முழுநேர தீவிர நடிகராக மாறினார். விடுதலை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த அவர், இந்தப் படத்தின் மூலம் தனக்கு இன்னொரு முகம் இருப்பதை நிரூபித்தார். விடுதலை படத்தின் முதல் பாகம் மார்ச் மாதம் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இதில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்திருந்தனர். விடுதலை முதல் பாகத்தில் நாயகன் சூரியையும் மற்றும் கிராம மக்களை சுற்றி நிகழ்வது போல கதையம்சம் இருந்தது.

ஆனால், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் பிளாஷ் பேக் உள்ளிட்ட அம்சங்கள் காட்டப்பட உள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே சிறுமலை வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று (Viduthalai 2 Movie VFX Technology) வெளியாகியுள்ளது.

புதிய தொழில் நுட்பம் :

அதாவது, இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாகவும், படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் கணவன் மனைவியாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர்களது கதாபாத்திரங்கள் 1960 காலகட்டத்தில் அமைக்கப்பட உள்ளதால், இருவரையும் இளமையாக காட்ட டீஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த (Viduthalai 2 Movie VFX Technology) வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார். சூரியின் கதாபாத்திரம் படமாக்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதியின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக கமல்ஹாசனை இளமையாக காட்ட இந்தியன் 2ல் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இயக்குனர் ஷங்கர், அதே தொழில் நுட்பத்தை விடுதலை 2 படத்திலும் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜாவின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் ‘விடுதை’ படத்தின் இரண்டாம் பாகத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply