Viduthalai 2 Review : விடுதலை 2 திரைப்படத்தின் திரை விமர்சனம்

அசுரன் படத்தில் ரசிகர்கள் தனுஷை பார்த்து எப்படி மிரண்டார்களோ அதை விட இரண்டு மடங்கு விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் ருத்ர தாண்டவத்தை ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று விமர்சனத்தில் கூறிவருகின்றனர். இந்நிலையில் படத்தின் திரை விமர்சனத்தை (Viduthalai 2 Review) காணலாம்.

விடுதலை

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலரும் நடித்த விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தின் தொடக்கத்தில் நீண்ட சிங்கிள் ஷாட் ரயில் விபத்துக் காட்சி ரசிகர்களை பிரமிக்க வைக்கும். பெருமாள் வாத்தியார் யார் என்று தெரியாமல் அவரை சந்திக்க செல்லும் கான்ஸ்டபிள் குமரேசன், போலீஸ் படையாலயே பிடிக்க முடியாமல் போன பெருமாள் வாத்தியாரை தனியாளாக ஒரு சிறிய குழுவுடன் போராடி பிடித்து கொடுப்பதுடன் முதல் பாகம் முடிந்திருக்கும். இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் (Viduthalai 2 Review) பெருமாள் வாத்தியார் யார்? ஒரு சாதாரண கூலித் தொழிலாளி எப்படி புரட்சியாளராக மாறுகிறார் என்ற கதையை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.

விடுதலை 2 திரை விமர்சனம் (Viduthalai 2 Review)

விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான நிலையில் அதன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி இன்று வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் முதல் பாதி பிரமாதம் என்றும், படத்தின் முதல் 30 நிமிடம் அருமை என்றும் கூறியுள்ளனர். டயலாக்குகள், ஆக்‌ஷன், புரட்சி என எல்லாவற்றிலும் விஜய் சேதுபதி தெறிக்கவிட்டுள்ளார். படம் சுவாரசியம் குறையாமல் சும்மா (Viduthalai 2 Review) மிரட்டலாக இருக்கிறது. விடுதலை 2 சூப்பர் என படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படத்தை தியேட்டரில் பார்த்தது விவரிக்க முடியாத அனுபவமாக இருந்தது. அதுவும் இளையராஜாவின் இசை பிளாக்பஸ்டர். பல காட்சிகள் தத்ரூபமாக இருக்கு. படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் என்று பாராட்டுகின்றனர். விடுதலை 2 படத்தின் மூலம் விஜய் சேதுபதியின் இன்னொரு முகத்தை பார்க்கலாம். அந்த அளவிற்கு தனது நடிப்பால் நம்மை மிகவும் கவர்ந்துள்ளார். விடுதலை 2 திரைப்படத்தின் மூலம் வெற்றிமாறனுக்கு தேசிய விருது (Viduthalai 2 Review) பெற்ற மற்றொரு படமாக அமையும் எனவும் கூறுகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply