Viduthalai 2 Trailer : விடுதலை 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் வெற்றிமாறன். ஆடுகளம், பொல்லாதவன், அசுரன், விசாரணை, வடசென்னை போன்ற வித்தியாசமான கதைக்களங்களை கையாண்டு கமர்ஷியல் வெற்றியையும் கொடுத்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக அறிமுகமான விடுதலை திரைப்படம் (Viduthalai 2 Trailer) கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. காமெடி நடிகனாக நடித்து வந்த சூரி தன்னை ஒரு உணர்வுபூர்வமான நடிகராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். விஜய் சேதுபதி இந்த படத்தில் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்து ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். உண்மை சம்பவங்களை மையப்படுத்தி படமாக்கப்பட்டு வெளிவந்த விடுதலை திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் அரசியல் விவாதப் பொருளாக மாறியது. அதுமட்டுமல்லாமல் இந்த விடுதலை திரைப்படம் வெற்றிமாறனின் சினிமா பயணத்தில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது. மிகக் குறைவான பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட இப்படம் எதிர்பார்ப்புகளை மீறி இரண்டு பாகங்களாக விரிவடைந்தது. 

விடுதலை 2

விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இதன் நீட்சியாக இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர், கிஷோர், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், பாலாஜி சக்திவேல், இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு இளையராஜா இசைமைத்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் (Viduthalai 2 Trailer) வெளியாகியுள்ளது.

விடுதலை 2 ட்ரெய்லர் (Viduthalai 2 Trailer)

சற்று முன் விடுதலை 2 படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் (Viduthalai 2 Trailer) வெளியிட்டுள்ளனர். 2.40 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லரில் நிலம், இனம், மொழி என மக்களை ஒன்று சேர்க்கும் பணியை தொடங்கியுள்ளோம் என்று விஜய் சேதுபதியின் குரலுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. வெளியான முதல் பாகத்தில் முகத்தைக் காட்டாத விஜய் சேதுபதி துப்பாக்கியும் கையுமாக கர்ஜிக்கிறார். மேலும் ட்ரெய்லரில் மஞ்சு வாரியரின் காதல் காட்சியும் இடம் பெற்றுள்ளது. தற்போது ட்ரெய்லர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply