Viduthalai 2 : விடுதலை 2 படத்திற்காக கெட்டப் மாற்றிய விஜய் சேதுபதி

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விடுதலை’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாம் பாகத்திற்கான (Viduthalai 2) படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெருமாள் வாத்தியார் என்ற முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர் நடிக்கக்கூடிய வேடத்தின் லேட்டஸ்ட் லுக் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Viduthalai 2

தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பமான இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் திகழ்ந்து வருகிறார். இவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘விடுதலை’ திரைப்படம் ரசிகர்களிடம் வித்தியாசமான வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் ‘Viduthalai 2’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் ஒன்றன் பின் ஒன்றாக ஹிட் படங்களை கொடுத்து வருபவர் வெற்றிமாறன். அவர் தனது எல்லா படங்களிலும் சமூக பிரச்சனைகளை தொடர்ந்து பேசி வருகிறார். இதனாலேயே அவரது படங்களுக்கு வரவேற்பு கிடைக்கும் அளவுக்கு எதிர்ப்பும் வருகிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமூகப் பிரச்சனைகளை தன் படங்கள் மூலம் தொடர்ந்து பேசி வருகிறார்.

பெருமாள் வாத்தியார்

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்த சூரியை ஹீரோவாக வைத்து வெற்றிமாறன் இயக்கிய படம் ‘விடுதலை’. மேலும், நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் பெருமாள் வாத்தியார் வேடத்தில் நடித்துள்ளார், இதில் பவானிஸ்ரீ, கவுதம் மேனன், ராஜீவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தற்போது இரண்டாம் பாகத்திற்கான (Viduthalai 2) படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் அமீரின் புதிய காபி ஷாப்பை திறந்து வைக்க நடிகர் விஜய் சேதுபதி சென்றிருந்தார். அப்போது அவர் மெல்லிய மீசை கண்ணாடியுடன் புதிய தோற்றத்தில் இருந்தார். இவரின் இந்த புதிய கெட்டப் எந்த படத்திற்கு என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலின் படி அவரது இந்த புதிய கெட்டப் ‘விடுதலை’ இரண்டாம் பாகத்தில் (Viduthalai 2) கலிய பெருமாளுக்கானது என்பது தெரியவந்துள்ளது. இந்த கெட்டப்புடன் வெளியில் செல்ல விஜய் சேதுபதி தயங்கினாராம். ஆனால் வெற்றிமாறன் அதெல்லாம் பரவாயில்லை. போயிட்டு வாங்க என சொல்லி அனுப்பினாராம். இவரின் இந்த புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகம் (Viduthalai 2) வெளியாகி பெரும் வரவேற்பை பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply