Vignesh Shivan Latest Post : நயன்தாராவை வாழ்த்தி போஸ்ட் போட்ட விக்னேஷ் சிவன்...

பதான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் ஷாருக்கான் தற்போது ஜவான் படத்தில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லர்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி மற்றும் பிரியா மணி முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். தொடர்ந்து ஜவான் படத்தில் இருந்து போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், நயன்தாராவின் கணவரும் மற்றும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் நயன்தாராவை வாழ்த்தி போஸ்ட் போட்டுள்ளார்.

போஸ்டர் வெளியீடு

ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘ஜவான்’ புதிய அறிவிப்புகளால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவின் ‘ஜவான்’ போஸ்டரை ஷாருக்கான் வெளியீட்டு அதில் ‘புயலுக்கு முன் வரும் இடி இவர்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த போஸ்டரில் நயன்தாரா போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இதில் நயன்தாரா தனது கையில் துப்பாக்கிகளை ஏந்தியபடி தீவிரமான தோற்றத்துடன் ஆக்ஷனுக்கு தயாராக இருப்பது போல இருக்கிறது.

Vignesh Shivan Latest Post - நயன்தாராவை வாழ்த்திய விக்னேஷ் சிவன்

வெளியான நயன்தாராவின் போஸ்டரை பார்த்த விக்னேஷ் சிவன் ஷாருக்கானின் தீவிர ரசிகராக இருந்து அவரது திரைப்படங்களை மட்டுமே பார்க்கவேண்டும் என்று இருந்த நயன்தாரா தற்போது, ஷாருக்கானுக்கு ஜோடியாகவே மிகப்பெரிய படத்தில் நடித்து வருகிறார். இந்த போஸ்டரை பார்த்த விக்னேஷ் சிவன் ‘உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன்’ என நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply