Vignesh Shivan Next Movie: அபிஷேக் பச்சன் - விஜய் சேதுபதியுடன் இணையும் விக்னேஷ் சிவன்
அஜீத் குமாரின் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறியதில் இருந்து அவரது அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Vignesh Shivan Next Movie: விக்னேஷ் சிவன் புதிய படத்தில் அபிஷேக் பச்சன் – விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் பான் இந்தியன் படமாக உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவன் தற்போது மும்பையில் இருக்கிறார். சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்கள் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில், ‘என் குழந்தைகளுடன் ஒவ்வொரு நொடியும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி. வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளுக்கும் ஒரு நன்மை உண்டு. பாராட்டும் வெற்றியும் நமக்குக் கற்றுத் தருவதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நமக்குக் கற்றுத் தருகிறது.
எனது விக்கி 6 படத்திற்காக இதயத்திலிருந்து தயாராகி வருகிறேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் என்னிடம் கருணை காட்டிய மக்களுக்கும் கடவுளுக்கும் நன்றி. உங்கள் ஆதரவும் என் மீதான நம்பிக்கையும் இந்த நிச்சயமற்ற சூழ்நிலையை அடையாளம் கண்டுகொள்வதற்கு மட்டுமின்றி தப்பிக்கவும் எனக்கு உதவியது. இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எதிர்காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். என் மூச்சைப் பிடிக்கவும் என் குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிடவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.