Vijay Antony Daughter Death : தற்கொலை குறித்து விஜய் ஆண்டனியின் பேச்சு...

தனது மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்கொலை குறித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கடைசியாக தற்கொலை (Vijay Antony Daughter Death) குறித்து பேசியது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முகத் திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், நான் அவன் இல்லை, உத்தம புத்திரன், வெடி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். நான் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் ஆண்டனி, தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், காளி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதற்கிடையில் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா என்ற 2 மகள்கள் உள்ளனர், மூத்த மகள் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

Vijay Antony Daughter Death :

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மீரா தூக்கிட்டு தற்கொலை (Vijay Antony Daughter Death) செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மீரா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை 3 மணியளவில் மகளின் அறைக்கு வந்த அவரது தந்தை விஜய் ஆண்டனி மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார், ஊழியர்கள் உதவியுடன் அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் முதற்கட்ட விசாரணையாக தேனாம்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த சில நாட்களாக இதற்கு மருந்து சாப்பிட்டு வந்தது தெரியவந்தது.

மேலும், மகள் படிக்கும் சர்ச் பார்க் பள்ளி மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் தெரியாததால், மகள் கடைசியாக யாரிடம் பேசினார். என்ன பேசினார் என்பது குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் விஜய் ஆண்டனிக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்கொலை குறித்து விஜய் ஆண்டனியின் பேச்சு :

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி அளித்த பேட்டியில் தற்கொலை எண்ணம் எதனால் ஏற்படுகிறது என்று பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: பலருக்கு தற்கொலை எண்ணம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். பலருக்கு பணப்பிரச்சனை, ஒருவர் மீது அதிக நம்பிக்கை வைத்து அவர்கள் உங்களுக்கு துரோகம் செய்யும் போது அதிக தற்கொலை எண்ணம் வரும்.

பெரும்பாலும் இது பள்ளியில் நடக்கும். படிப்பில் ஏற்படும் மன அழுத்தத்தால் இது நடக்கிறது. நம்ம பிள்ளைகள் ஸ்கூல் விட்டு வந்தவுடனே, டியூசன் போக சொல்றோம். ஸ்கூல்லயே படிச்சிட்டு தான் வருவாங்க, எப்பவுமே ஏளனமா பார்த்துட்டு, யோசிக்க நேரமில்லாமல் ஆக்கிடுறோம். இப்படி வரக்கூடாது. அதற்கு சுற்றி இருப்பவர்கள் காரணமாக இருக்கலாம். முக்கியமாக பெற்றோர்கள் பசங்கள ஃபிரியா விட்ருங்க. நீங்க உங்கள லவ் பண்ணாலே தற்கொலை ஏதும் நடக்காது என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இப்படிப்பட்ட மனுஷனுக்கா இப்படி நடக்கணும் என்று கூறி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply