Vijay Antony Latest Post : மகள் மீராவுடன் நானும் இறந்துவிட்டேன்

“நான் என் மகள் மீராவுடன் இறந்துவிட்டேன், நான் இப்போது அவருக்காக நேரத்தை செலவிட ஆரம்பித்து விட்டேன்” என்று நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் (Vijay Antony Latest Post) தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா. இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இவர்களுக்கு மீரா, லாரா என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் மீரா தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174 (இயற்கைக்கு மாறான மரணம்) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீரா தனியார் பள்ளியில் பொருளாதார பாடப்பிரிவு எடுத்து படித்து வந்தார். பேட்மிட்டன் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட மீரா, கடந்த 6 மாதங்களாக மன உளைச்சலால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. 12ம் வகுப்பு படித்த மீரா ஏன் மன உளைச்சலுக்கு ஆளானார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெறும் 16 வயதே ஆன மீரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த தமிழினத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு மீராவின் உடல் தகனம் செய்யப்பட்டது. விஜய் ஆண்டனி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், மீராவின் இறுதிச் சடங்குகள் அவரது குடும்ப பாரம்பரியப்படி தேவாலயத்தில் நடைபெற்றது.

திரையுலகில் அனைவராலும் விரும்பப்பட்ட விஜய் ஆண்டனியின் மகளின் மரணம் குறித்து தகவல் அறிந்த அனிருத், விஷால், ஹரிஷ் கல்யாண், பரத், ராதிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜய் ஆண்டனியின் மகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது மட்டுமின்றி, விஜய் ஆண்டனிக்கு தங்களது ஆறுதலையும் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகரும், இசைமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது மகள் உயிர் இழந்தது குறித்து தன்னுடைய X தள பக்கத்தில் பதிவு (Vijay Antony Latest Post) ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Vijay Antony Latest Post - விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு :

“என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். எனது மகள், இந்த உலகைவிட சிறந்த இடத்திற்கு அதாவது பணம், ஜாதி மதம், வலி, பொறாமை, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவளுடைய பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள்” என்று எழுதி விஜய் ஆண்டனி தனது சோகத்தை வெளிப்படித்தியுள்ளார். இந்த பதிவு (Vijay Antony Latest Post) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply