Vijay Built The Temple For His Mother : தாய்க்கு கோவில் கட்டிய விஜய் - ரசிகர்கள் நெகிழ்ச்சி

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் லியோ ஆகும். இப்படம் விமர்சன ரீதியாக அடிவாங்கினாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் நடிக்கும்போதே வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிக்க கமிட் ஆகியிருந்தார் விஜய். படத்திற்கு GOAT என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் நடந்து வருகிறது. அங்கு எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக விமர்சிக்கப்பட்டது. எனவே அதை சரிசெய்யும் பொறுப்பில் அவர் உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் தோல்வியடைந்தது. ஆனால், விஜய் எப்படி அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீசுக்கு முன்பே வெங்கட் பிரபு விஜய்யிடம் கதை சொல்லி ஒப்புதல் பெற்றுக்கொண்டாராம்.

GOAT :

இந்நிலையில், படத்திற்கு GOAT (Greatest Of All Time) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். பல வருடங்களுக்குப் பிறகு பிரஷாந்த் தமிழில் ரீ-என்ட்ரி ஆவதால், விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைவதாலும், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் போடப்பட்டு ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. அதன் பிறகு தாய்லாந்து மற்றும் துருக்கியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து வேறு இடத்தில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டது.

ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபுவின் சகோதரி பவதாரிணியின் மரணம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது. விஜய்க்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. விஜய்க்கு கிடைத்த வரவேற்பை பார்த்து ஒட்டுமொத்த கேரள திரையுலகமும், தமிழ் திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அங்கு படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ளது. இதுவே கடைசி ஷூட்டிங் ஷெட்யூலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay Built The Temple For His Mother :

இதற்கிடையில் விஜய் அவரது அப்பாவிடம் பேசுவதில்லை என்றும், கடந்த சில மாதங்களாக அவர் தனது தாயுடன் முன்பு போல் நெருக்கமாக இல்லை என்று ஒரு வதந்தி பரவி வருகிறது. நிலைமை இப்படியிருக்க சில நாட்களுக்கு முன் சாய்பாபா கோவிலில் விஜய் இருக்கும் படம் வெளியானது. அதை பார்த்த ரசிகர்கள் விஜய் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றாரா என்று கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஷீரடி சாய்பாபா கோவிலில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல. சென்னை கொரட்டூரில் உள்ள தனது சொந்த நிலத்தில் விஜய் தனது தாய் ஷோபாவுக்காக சாய்பாபா கோவில் (Vijay Built The Temple For His Mother) கட்டியதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், அட தளபதி அம்மாவுக்கு கோயில் கட்டியிருக்கிறாரா என ரசிகர்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply