Vijay Devarakonda Donate 1 Crore : 100 குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்கும் விஜய் தேவரகொண்டா

Vijay Devarakonda Donate 1 Crore :

குஷி படத்தின் வெற்றியால் 100 குடுங்களுக்கு ஒரு கோடி ரூபாய் (Vijay Devarakonda Donate 1 Crore) வழங்க உள்ளதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ளார். தேவரகொண்டாக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவிஸ் தயாரித்துள்ளது. இப்படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு கன்னடம், தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா என்ற பெயரில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. சமந்தா, விஜய் தேவரகொண்டா இருவரின் கடைசிப் படங்களும் தோல்வியைத் தழுவியதால் குஷி படத்தின் மீது மலைபோல் நம்பிக்கை வைத்தனர். நம்பிக்கை வைத்த மாதிரி இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

காதல் கதை படமான குஷி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கதையில் மணிரத்னத்தின் உருவம் இருப்பதாக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. காதலித்து திருமணம் செய்து இருவரும் சந்திக்கும் பிரச்சனைகளை கையாளும் குஷி திரைப்படம், மணிரத்னத்தின் அலைபாயுதே படம் போலவும், காஷ்மீர், முஸ்லீம் பெண் போன்ற காட்சிகள் பாம்பே போலவும் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும், குஷி 2K குழந்தைகள் விரும்பும் ஒரு காதல் படமாக குஷி இருப்பதால் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் வெற்றி விழா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, “குஷி படத்தின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சில விஷயங்களைப் பற்றி யோசித்தேன். அப்படிச் செய்யாவிட்டால் என்னால் தூங்க முடியாது. எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாக குஷி படத்தின் சம்பளத்தில் இருந்து ரூபாய் 1 கோடி ரூபாயை (Vijay Devarakonda Donate 1 Crore) ரசிகர்களின் குடும்பத்திற்கு வழங்க திட்டமிட்டுள்ளேன்.

Vijay Devarakonda Donate 1 Crore : கஷ்டப்படும் ரசிகர்களின் 100 குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க உள்ளேன். எனது வெற்றி, மகிழ்ச்சி மற்றும் சம்பளம் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் நன்கொடையாக அளிக்கும் பணத்தை வீட்டு வாடகைக்கு அல்லது சம்பந்தப்பட்ட குடும்பத்தின் கல்விச் செலவுக்கு பயன்படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன். இந்த வேலையை முடித்தால்தான் படத்தின் வெற்றி எனக்கு முழுமையடையும் என குறிப்பிட்டுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் இந்த முடிவை பலரும் வரவேற்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply