TVK Leader Actor Vijay Extends Bakrid Wishes : பக்ரீத் வாழ்த்து தெரிவித்த த.வெ.க தலைவர் விஜய்

நடிகரும், தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை வாழ்த்து (TVK Leader Actor Vijay Extends Bakrid Wishes) தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடவுள் நம்பிக்கை உள்ள தூதர்கள் எந்த தியாகத்தையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதை உணர்த்தவே பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியில் வரும் துல்ஹஜ் மாதத்தின் 10வது நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் பொது மைதானங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இஸ்லாமிய மக்கள் அனைவரும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் இன்று, பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் நாட்டு மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

TVK Leader Actor Vijay Extends Bakrid Wishes :

  • அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்பண்புகளை எடுத்துரைக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில், எனது இஸ்லாமிய உறவினர்கள் அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” (TVK Leader Actor Vijay Extends Bakrid Wishes) என தெரிவித்துள்ளார். 
  • மேலும் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், குடும்பம், நிறுவனம், அரசு என எந்த ஒரு அமைப்பும் யாரோ ஒருவரின் தியாகத்தால் கட்டமைக்கப்படுகிறது. அந்த தியாகத்தை, கொண்டாட்டத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளும் பக்ரீத், சக மனிதனை நேசிக்கச் சொல்கிறது. அண்டை வீட்டாருக்கும், ஏழைகளுக்கும் ஈகை பண்பாட்டு போதிக்கிறது குறிக்கொள் மிக்க இந்த கொண்டாட்டத்தை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம், தருவோர் இருவரும் வாழ்க! என தெரிவித்துள்ளார்.
  • இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “ஈத் முபாரக்! இந்த சிறப்பு நாள் அனைவருக்கும் செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டு வரட்டும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் பல்வேறு பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply