Vijay Makkal Iyakkam Gave Food: தமிழகம் முழுவதும் பிரியாணி விருந்து: அசத்திய விஜய் மக்கள் இயக்கத்தினர்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி அசத்தியுள்ளனர்.நேற்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுவதை அடுத்து தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நீண்ட காலமாக பட்டினியால் வாடும் மக்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று உலக பசி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக பட்டினி தினமான நேற்று தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடக ஆகிய ஆகிய மாநிலங்களில் ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் ஒரு நாள் மதிய உணவு வழங்கப்படும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் பஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்தார். அதன்படி முதற்கட்டமாக திருச்சியில் இந்த திட்டத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் பஸ்சி ஆனந்த் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களால் நேற்று செயல்படுத்தப்பட்டது.

இதையடுத்து நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நேற்று மதியம் ஒரு வேளை உணவு வழங்கினர். நடிகர் விஜய்யின் உத்தரவின் பேரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பட்டினி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மாநகரம் மற்றும் ஒன்றியப் பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் ஏற்பாடு செய்தார். பல இடங்களில் வழங்கப்பட்ட இந்த மதிய உணவை ஏராளமானோர் வாங்கி பயனடைந்தனர்.

Latest Slideshows

Leave a Reply