Vijay Makkal Iyakkam Member Files Complaint : நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு

நடிகர் விஜய் மீது காலணி வீசிய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை (Vijay Makkal Iyakkam Member Files Complaint) எடுக்க கோயம்பேடு போலீசாரிடம் விஜய் மக்கள் இயக்கம் புகார் அளித்துள்ளது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது மரணம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் முதல் தேமுதிக நிர்வாகிகள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவரது இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டனர். கடந்த 28ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது நடிகர் விஜய்யும் அஞ்சலி செலுத்தினார். மிகவும் சோகமாக காணப்பட்ட விஜய், கனத்த இதயத்துடன் பிரேமலதாவுக்கும் அவரது மகன்களுக்கும் ஆறுதல் கூறினார். பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடலை சில நொடிகள் கண் வாங்காது பார்த்துவிட்டு விஜய் சோகத்துடன் நடந்து சென்றது நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வாகவும் பார்க்கப்பட்டது.

Vijay Makkal Iyakkam Member Files Complaint :

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் திரும்பியபோது, ​​அவரைச் சுற்றி ஏராளமானோர் திரண்டனர். நகர முடியாமல் தவித்த விஜய், பின்னர் ஒருவழியாக காரில் ஏறி புறப்பட்டார். கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் மீது காலணி வீசப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காலணி வீச்சு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் (Vijay Makkal Iyakkam Member Files Complaint) அளிக்கப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் அப்புனு, கோயம்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அடையாளம் தெரியாத நபர்களால் காலணி வீசப்பட்டது விஜய் ரசிகர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட நபரை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் (Vijay Makkal Iyakkam Member Files Complaint) தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply