Vijay Makkal Iyakkam Trolls : இதைத்தான் விஜய் செய்யச் சொன்னாரா?

Vijay Makkal Iyakkam Trolls :

மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நடிகர்கள் கார்த்தி, சூர்யா, ஹரிஷ் கல்யாண் ஆகிய பிரபலங்கள் நிதியுதவி வழங்கியுள்ளனர். அறந்தாங்கி நிஷா, கேபிஒய் பாலா மற்றும் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் நடிகர் விஷால், போஸ் வெங்கட் உள்ளிட்ட பிரபலங்கள் குறை சொல்ல ஆரம்பித்துள்ளனர். நடிகர் விஜய் ஏன் இன்னும் அமைதியாக காத்திருக்கிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் களத்தில் இறங்கி உதவ வேண்டும் என்று அறிவிப்பு (Vijay Makkal Iyakkam Trolls) ஒன்றை வெளியிட்டிருந்தார்.

விஜயின் அறிவிப்பு :

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்டோர் மக்களை சந்தித்து குறைகளை கேட்கின்றனர். ஆனால், அரசியலுக்கு வர வேண்டும் என்ற கனவோடு இருக்கும் நடிகர் விஜய், மக்களுக்காக களம் இறங்காமல் தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கு மட்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார் என விமர்சனங்கள் (Vijay Makkal Iyakkam Trolls) எழுந்துள்ளன. விஜய்யின் ட்வீட் வருவதற்கு முன்பே விஜய் மக்கள் இயக்கமும், விஜய் ரசிகர்களும் களம் இறங்கி அந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் இந்த கருத்தும் பலரை களப்பணி செய்ய தூண்டியுள்ளது.

விஜய் ரசிகர்கள் அன்னதானம் :

ஈசிஆர் சரவணன் முதியோர் இல்லத்தில் பட்டினியால் வாடும் மக்களுக்கு அன்னதானம் செய்யும் வீடியோவை சற்றுமுன் வெளியிட்டிருந்தார். தளபதி விஜய் உத்தரவுப்படி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குகிறோம் என்று விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்திருந்தது. ஆனால், அந்த வீடியோவில் விஜய்யின் புகைப்படத்தை தூக்கிக்கொண்டு ஒருவர் நடமாடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மக்கள் நிர்வாகிகள் அனைவரும் தங்கள் சட்டையில் விஜய்யின் புகைப்படம் தைக்கப்பட்ட பேட்ஜ்களை வைத்துள்ளனர். அதையும் தாண்டி ஒருவர் விஜய்யின் பெரிய ஃப்ரேம் போட்டோவை உணவு அருந்துபவர்களுக்கு முன்னால் காட்டிக் கொண்டு ஒருவர் செல்வது எல்லாம் கேவலமான செயல் என்றும், இப்படிப்பட்டவர்களால் தான் விஜய்க்கு கெட்ட பெயர் வருகிறது என்றும் கார்த்திக் ரவிவர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினி ரசிகர்கள் அனைவரும் இதைத்தான் விஜய் செய்யச் சொன்னாரா? என்ற கேள்வியை (Vijay Makkal Iyakkam Trolls) எழுப்பி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply