Vijay Makkal Iyakkam: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் அதிரடி அறிவிப்பு

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தென்னிந்தியா முழுவதும் இலவச மதிய உணவை வழங்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

உலக பட்டினி தினம்

உலக பட்டினி தினமானது ஆண்டுதோறும் மே 28 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது . இந்த தினமானது 2011 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் 820 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீண்டகால பட்டினியால் வாடுவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும். விழிப்புணர்வை பரப்ப செய்வதோடு மட்டுமல்லாமல், நிலையான முயற்சிகள் மூலம் பட்டினி மற்றும் வறுமையைத் தீர்ப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

தென்னிந்தியா முழுவதும் இலவச மதிய உணவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக தன்னுடைய 68 வது படத்திற்காக வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார். நடிகர் விஜய் சமீபகாலமாக அரசியலுக்கு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் மூலம் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12வது பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை விஜய் மக்கள் இயக்கம் வழங்கவுள்ளது.

இந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உலகம் முழுவதும் மே 28 ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. தளபதி சொல்லுக்கு இணங்க உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 11 மணி அளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தை தொடர்ந்து கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தளபதி மக்கள் இயக்கம் சார்பாக பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு முடிந்தவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தளபதி மக்கள் இயக்கம் இந்த நலப்பணியை செய்கிறது.

Latest Slideshows

Leave a Reply