Vijay Meets 10th and 12th Students: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சந்திக்கும் விஜய்
10, 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை விஜய் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய் ஆவர். இவர் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார் விஜய். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தளபதி 68 படத்தின் பூஜையும் அடுத்த மாதம் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.
விஜயின் அடுத்த திட்டம்
இருந்தாலும் விஜய்யின் ஒவ்வொரு செயலும் அரசியலை நோக்கித்தான் இருக்கிறது. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமா மாற்றிஅதன் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை வழங்கி வருகிறார். இதுமட்டுமின்றி தனது ரசிகர் மன்றம் மூலம் பல பணிகளை செய்து வருகிறார். இவர் செய்யக்கூடிய அனைத்து செயல்களுமே அவரது அரசியல் வருகையை குறிக்கிறது. இவர் நடித்த தலைவா படத்தில் இருந்தே இதற்கான குறியீடுகள் தெரிய தொடங்கிவிட்டன என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
விஜயின் படத்தில் சில இடங்களில் இருக்கும் அரசியல் வசனங்களையும் ரசிகர்கள் கவனிக்க தவறியதில்லை இவை எல்லாம் ட்ரைலர் தான். விஜயின் ஒவ்வொரு ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அவரது பேச்சை அரங்கமே திகைத்து பார்க்கும். இதில் தத்துவம், அரசியல் என எல்லாமே கலந்திருக்கும். அரங்கம் முழுவதும் அவரது பேச்சு தான் எதிரொலிக்கும். அந்த அளவுக்கு அதிரடியாக பேசும் விஜய் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் உலக பட்டினி தினமான மே 28 ஆம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஒருநாள் சேவகம் அமைத்து அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்தார். தனது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உணவு வழங்கியுள்ளார்.
மாணவர்களை சந்திக்கும் விஜய் (Vijay Meets 10th and 12th Students)
அடுத்த கட்டமாக 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை சந்திக்க உள்ளததாக நடிகர் விஜய் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். அதன்படி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை விஜய் சந்திக்கிறார். ஒரு தொகுதிக்கு 6 பேர் வீதம் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் இருந்து 1,444 மாணவர்களை நடிகர் விஜய் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் அந்த மாணவர்களுக்கு அவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளன.
இந்நிலையில் நடிகர் விஜய் ஜூன் 3 ஆம் தேதி சென்னை மதுரவாயிலில் உள்ள தனியார் மண்டபத்தில் மாணவர்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விஜய் ரசிகர்கள் தமிழகம் தமிழகம் முழுவதும் விலையில்லா விருந்து திட்டம், இரத்த தானம் ஆகிவற்றை செயல்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளார். பள்ளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் பட்சத்தில் மாணவ மாணவிகளின் ஆதரவும் மற்றும் பெற்றோர்களின் ஆதரவை பெற முடியும் என விஜய் மக்கள் இயக்கம் குறிப்பிட்டு வருகிறது.