Vijay Met Premalatha : பிரேமலதாவை சந்தித்த விஜய் - கோட் படம் குறித்து பேச்சுவார்த்தை

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடித்துள்ளனர். மறைந்த கேப்டன் விஜயகாந்த் கோட் படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. AI டெக்னாலஜி மூலம் அவரை இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளது படக்குழு. இந்நிலையில் நேற்று பிரேமலதா விஜயகாந்த் அவரது இல்லத்திற்கு (Vijay Met Premalatha) சென்று நடிகர் விஜய் உள்ளிட்ட கோட் படக்குழுவினர் சந்தித்துள்ளனர்.

கோட் :

நடிகர் விஜய்-வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள படம் கோட் ஆகும். இப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இருவேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அறிவியல் புனைகதை ஜானரில் உருவாகி உள்ளதாக கூறப்படும் கோட் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Vijay Met Premalatha :

இதற்கிடையில், இந்த படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். AI தொழில்நுட்பம் மூலம் இப்படத்தில் இவரை படக்குழுவினர் நடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அவர் இரண்டு நிமிடங்கள் தோன்றுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது மனைவியும், தேமுதிக தலைவருமான பிரேமலதா விஜயகாந்த் கோட் படத்தில் நடித்தது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் நேற்று பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பிரேமலதா விஜயகாந்துக்கு நடிகர் விஜய் மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். விஜயகாந்தின் உருவப்படத்துக்கும் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது விஜயகாந்தின் மகன்களும் உடனிருந்த நிலையில், கோட் படத்தில் விஜயகாந்த் நடித்த காட்சிகளை காட்டி கோட் படக்குழு ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply