Vijay Rides A Scooter : தி கோட் ஷுட்டிங் நடுவே ஜாலியாக ஸ்கூட்டர் ஒட்டிய விஜய்

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கோட்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் அவரின் வீடியோ (Vijay Rides A Scooter) ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தற்போது அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். அவரது கட்சிக்கு ‘தமிழக வெற்றிக் கழகம்‘ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது ஒவ்வொரு அசைவும் திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. தற்போது ‘GOAT’ படத்தில் நடித்து வரும் விஜய், இன்னும் கமிட்டாகியுள்ள படமான ‘தளபதி 69’ படத்துடன் சினிமாவில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரது கடைசி இரண்டு படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

GOAT :

தி கோட் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், இலங்கை, தாய்லாந்து, இஸ்தான்புல், மாஸ்கோ, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, வைபவ், பிரேம் ஜி, மற்றும் பலர் நடித்துள்ளனர், இப்படத்தின் கதை டைம் ட்ராவலை அடிப்படையாகக் கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா புதிய கீதா படத்திற்கு பிறகு, விஜய்யுடன் இணைந்திருப்பது படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு இருதரப்பு ரசிகர்களிடையேயும் அதிகரித்துள்ளது. மேலும், நடிகை த்ரிஷா தி கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடப் போவதாகவும், கேமியோ ரோலில் நடிக்கப் போவதாகவும் வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

Vijay Rides A Scooter :

இதனிடையே, ‘GOAT’ படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் இரண்டு நாட்களுக்கு முன்னதாக படக்குழுவினருடன் ரஷ்யா சென்றடைந்தார். ‘GOAT’ படத்தின் அப்டேட்கள் இம்மாதம் முதல் வெளியாகும் என வெங்கட் பிரபு ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ‘GOAT’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய்யின் க்யூட் வீடியோ (Vijay Rides A Scooter) ஒன்று வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் GOAT பட கெட் அப்பில் ஃப்ரீஸ்டைல் ஸ்கூட்டர் ஒட்டியபடி விஜய் ஜாலியாக பயணிக்கும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி லைக்ஸ் பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply