Vijay Sethupathi : வில்லனாக நடிக்க மாட்டேன் | விஜய் சேதுபதி அதிரடி முடிவு

கோலிவுட்டின் பல்வேறு நடிகர்களில் முக்கியமானவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் கலக்கி வருகிறார். ஹீரோ மட்டுமின்றி வில்லன், கேமியோ ரோல்களிலும் நடிக்க விஜய் சேதுபதி தயங்கியதில்லை. இந்நிலையில் Vijay Sethupathi இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்றும் அதற்கான காரணத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

திரையுலகில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கியவர் Vijay Sethupathi. தொடர் போராட்டத்தால் இன்று பான் இந்தியா நட்சத்திரமாக மாஸ் காட்டி வருகிறார். சின்ன சின்ன கேரக்டர், ஹீரோவின் நண்பன், நெகட்டிவ் ரோல் என கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் விஜய் சேதுபதி. பீட்சா, சூது கவ்வும் என வித்தியாசமான கதைகளில் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வரத் தொடங்கினார். அதே சமயம் தேவைப்பட்டால் ஹீரோ இமேஜை விட்டுவிட்டு வில்லன் கேரக்டரில் மாஸ் காட்ட ஆரம்பித்தார். மாதவனுடன் விக்ரம் வேதா, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக பேட்ட, விஜய்க்கு வில்லனாக மாஸ்டர், கமல்ஹாசனுக்கு வில்லனாக விக்ரம் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி தனது வித்தியாசமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். அதே நேரத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது. அதன்படி தெலுங்கில் உப்பென்னா என்ற படத்தில் வில்லனாக நடித்தார்.

Vijay Sethupathi - இனி வில்லனாக நடிக்க மாட்டேன் :

கடைசியாக ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் Vijay Sethupathi இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். காந்தி டாக்ஸ், மகாராஜா ஆகிய படங்களில் நடித்து வரும் Vijay Sethupathi சமீபத்தில் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்றும் அதற்கான காரணத்தையும் கூறினார். வில்லனாக நடிப்பதில் பல பிரச்சனைகள் வரும், சில சமயங்களில் ஹீரோ என்னை தனிப்பட்ட முறையில் கேட்டதால் வில்லனாக நடித்தேன்.

மேலும், “வில்லன் கேரக்டரில் நடித்தால் நிறைய பாரபட்சம் பார்க்கப்படுகிறது. அதேபோல் ஹீரோவை விட வில்லன் கேரக்டர் சிறப்பாக இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சில படங்களில் வில்லனாக நடித்த காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டன. இதுபோன்ற காரணங்களால் இனி வில்லன் கேரக்டரில் நடிக்க மாட்டேன். விஜய் சேதுபதி கடைசியாக ஜவான் படத்தில் வில்லனாக நடித்தார். இதனை குறிப்பிட்டு தான் Vijay Sethupathi பேசினாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply