Vijay Spoke to Kerala Fans in Malayalam : கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசிய விஜய்

திருவனந்தபுரத்தில் கோட் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்தார். அப்போது, ரசிகர்களுடன் பேச விரும்பி, மைக்கை எடுத்துக்கொண்டு பஸ் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் (Vijay Spoke to Kerala Fans in Malayalam) பேசினார்.   வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கோட்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கிய போது, ​மலையாள ரசிகர்கள் விஜய்யின் கார் சேதமடையும் அளவிற்கு அன்பை வெளிப்படுத்தியதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை கேரள ரசிகர்களுக்கு இணையாக தமிழ் சினிமா ரசிகர்கள் போட்டி போட்டு படத்தை பார்த்தது போல், தற்போது நடிகர் விஜய்க்கு அவர் தங்கியிருக்கும் ஹோட்டலிலும், படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலும் தினமும் பெரும் கூட்டம் கூடுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, த்ரிஷா, சினேகா, லைலா, ஜெயராம், பிரேம்ஜி அமரன், மோகன், அஜ்மல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இது டைம் ட்ராவல் படமா? அல்லது மணி ஹெய்ஸ்ட் திரைப்படமா? என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். நடிகர் விஜய் இதுவரை இல்லாத வகையில் அப்பா மகனாக நடித்து வருகிறார்.

ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசிய விஜய் (Vijay Spoke to Kerala Fans in Malayalam)

நடிகர் விஜய் சமீபத்தில் கேரளாவில் தனது ரசிகர்களை சந்தித்தார். அதையடுத்து ரசிகர்களிடம் பேச ஆசைப்பட்டு மைக்கை எடுத்து பஸ்சில் ஏறி சுற்றியிருந்த கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசியது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. சிறிது நேரத்தில் இதற்கு மேல் மலையாளத்தில் முடியாது என தமிழிலேயே பேச ஆரம்பித்து விட்டார் விஜய். ஓணம் பண்டிகை அன்று மகிழ்ச்சி நிறைந்ததாக இருப்பிர்கள் என்று தெரியும். இப்போ எனக்கு இங்கு ஓணம் பண்டிகை நடப்பது போல் இருக்கிறது. உங்களையெல்லாம் பார்த்தால் எனக்கு ஓணம் கொண்டாட்டம் போல் இருக்கிறது என்று நடிகர் விஜய் பேசியது மலையாள ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இந்த ஊரில் என்னை இவ்வளவு பேர் விரும்புகிறார்கள், என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்று விஜய் கூறியதைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் குதிக்க ஆரம்பித்தனர். விஜய் கேரளாவில் இருக்கும் வரை அங்கு தினமும் ஓணம் கொண்டாட்டம் தான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் விரைவில் தமிழகத்தில் ஓட்டு வாங்க ஒவ்வொரு ஊரிலும் இப்படி சென்று பேசினால் கூட்டம் அலைமோதும் என தளபதி ரசிகர்கள் இந்த வீடியோக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply