Vijay TVK Meeting : பனையூரில் நடைபெறும் "தமிழக வெற்றிக் கழகத்தின்" ஆலோசனை கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள தலைமைச் செயலகத்தில் (Vijay TVK Meeting) இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என ‘தவெக’ கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமாக உள்ளார். ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் விஜய் சமீபகாலமாக அவரது படங்கள் அனைத்தும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில், விஜய் அரசியலுக்கு வருவார் என்ற வதந்திகள் சில வருடங்களாக கசிந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி “தமிழக வெற்றிக் கழகம்” என கட்சி பெயர் அறிவிக்கப்பட்டது. அதேநேரம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026ல் தான் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எனினும், அவரது கட்சியின் பெயரில் இலக்கணப்பிழை இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. பல்வேறு தரப்பினரால் சுட்டிக் காட்டப்பட்ட கட்சியின் பெயரில் உள்ள பிழையை ஏற்று, அதை விஜய் சரி செய்துள்ளார். அதாவது, தமிழ் இலக்கணப்படி, வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும் போது இடையில் “க்” என்ற ஒற்றெழுத்து வர வேண்டும் என்று சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் பலரும் சுட்டிக் காட்டினார்கள். இதற்கு சில அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் நடிகர் விஜய் தனது கட்சி பெயரின் நடுவில் “க்” என்ற ஒரு எழுத்தை சேர்த்து “தமிழக வெற்றிக் கழகம்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Vijay TVK Meeting :

இந்நிலையில், தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தவுடன் கட்சியின் சின்னம் மற்றும் கொடி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று (Vijay TVK Meeting) நடைபெறுகிறது. பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை நிலைய செயலகத்தில் இந்தக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தில் (Vijay TVK Meeting) கட்சித் தலைமை நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களைப் பொறுத்தவரை, ஒருபுறம் அவரை அரசியல் தலைவராகப் பார்க்க ஆசைப்பட்டாலும், இனி அவரை திரையுலகில் நடிகராகப் பார்க்க முடியாது என்பது வருத்தமளிக்கிறது. சிறுவயதில் இருந்து பார்த்து வளர்ந்த ஒரு நடிகரை பார்க்க முடியாமல் போனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்நிலையில், விஜய்யின் 69வது படமே அவரது கடைசிப் படமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply