Vijay Writes Letters to Fans: மகிழ்ச்சியா இருக்கு நண்பா! ரசிகர்களுக்கு கைப்பட கடிதம் எழுதிய விஜய்

விஜய் தனது பிறந்தநாளில் பல்வேறு உதவிகளை செய்த தனது ரசிகர்களுக்கு கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் வலம் வருகிறார். பல ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் விஜய் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். நடிகர் விஜய் சினிமாவில் மட்டும் இல்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அரசியல் சம்மந்தமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி பல்வேறு ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

விஜய் மக்கள் இயக்கம்

சமீபத்தில் மாநில அளவில் 10, +2 ஆகிய வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு தனது கையால் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார். இது தவிர ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ரசிகர்களுக்கு விஜய் எழுதிய கடிதம்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனது பிறந்தநாளையொட்டி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தனது ரசிகர்களுக்கு விஜய் தனது கைப்பட கடிதம் எழுதியுள்ளார். தனது பிறந்தநாளுக்கு 4 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை செய்த மக்கள் இயக்கத்தை சார்ந்த ஈசிஆர் சரவணன் மற்றும் ரசிகர்களுக்கு தனது கையால் கடிதம் ஒன்று எழுதி வாழ்த்தியுள்ளார்.

விஜய் எழுதிய கடிதத்தில் எனது பிறந்தநாளான ஜூன் 22 அன்று நமது மக்கள் இயக்கத்தின் மூலம் நீங்கள் அனைவரும் செய்த பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை நான் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாக அறிந்தேன். உங்களின் இந்த சிறப்பான செயல்களை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி. பிரியமுடன் விஜய். என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். விஜய் நிர்வாகிகளுக்கு தனது கைப்பட எழுதிய இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தகங்களில் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்களின் செயலை கண்டு மனம் திறந்து பாராட்டிய விஜயை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply