Vijaya Prabhakaran Speech : தப்பு தப்பா பேசாதீங்க | விஜயகாந்த் மகன் உருக்கம்

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது. லட்சக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. விஜயகாந்த் புரட்சிக் கலைஞர், கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 150 படங்களில் நடித்துள்ள இவர், தமிழக எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டனர்.

Vijaya Prabhakaran Speech :

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் (Vijaya Prabhakaran Speech), ”சின்ன வயசுல இருந்தே என் முகத்தை கண்ணாடியில் பார்த்ததை விட என் அப்பாவைதான் பார்த்து வளர்ந்திருக்கிறேன், அப்பா என்று சொன்னாலே உணர்ச்சிவசப்படுவேன். கேப்டன் நம்மை விட்டு எங்கும் போகவில்லை. அவர் நம்முடன்தான்  இருக்கிறார். அவர் இறந்ததில் இருந்து இதுவரை எந்த மீடியாக்களிலும் நான் பேசவில்லை. இப்போதுதான் முதல்முறையாக பேசுகிறேன். அதேபோல் நடிகர் சங்கம் நடத்திய எந்த நிகழ்ச்சியிலும் நானும் எனது சகோதரர் சண்முகபாண்டியனும் கலந்து கொள்ளவில்லை. அப்பா இல்லாமல் பேசும் முதல் நிகழ்ச்சி. எப்படி சொல்வது என்று தெரியவில்லை. எனது அப்பா சிறு வயதில் இருந்ததே கொடுத்துதான் பழகிருக்கிறார். நிறைய பேர், இன்று கேப்டன் இல்லை. என்ன நடக்கப் போகிறது என்று நினைக்கிறார்கள். அவரது கனவை நிறைவேற்ற தான் அவரது மகன்களாக விஜயபிரபாகரனும், சண்முக பாண்டியனும் இருக்கிறோம் என்பதை கூறிக்கொள்கிறேன்.     

Vijaya Prabhakaran Speech : இதை நான் மிகவும் பெருமையாகச் சொல்வேன். ஏனென்றால் ஒவ்வொரு புத்தாண்டிலும் நாம் அனைவரும் சில உறுதிமொழிகளை வீட்டில் எடுத்துக்கொள்கிறோம். 2023-ல் என் பிறந்தநாளுக்கு முன், அம்மாவுக்கு பொதுச்செயலாளர் பதவியைகொடுக்கும்போது அப்பாவிடம் சில வாக்குறுதிகளை கொடுத்தேன். 2024ல் முடிப்பேன். அது என்னவென்று இப்போது சொல்ல முடியாது. காலம் அதற்கான பதிலை சொல்லும். கடந்த பத்து ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மிகவும் அவதிப்பட்டார். இதை வேறு யாராவது தாங்குவார்களா என்று தெரியவில்லை. குகையில் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சொன்னேன். 71 வயது வரை விஜயகாந்த் கஷ்டப்பட்டாலும் நின்றார் என்றால் அதற்குக் காரணம் அவரது மன தைரியம்தான்.

தப்பா சொல்லாதீங்க :

விஜயகாந்துக்கு நினைவாற்றல் இல்லை என பல யூடியூப் சேனல்கள் தவறாக கூறி வருகின்றன. அதெல்லாம் பொய். அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கூட, எங்கள் வீட்டில் வேலை செய்த இரண்டு பேரிடம், தன் படங்களின் அனைத்துப் பாடல்களையும் இசைக்கச் சொல்லி மகிழ்ந்தார். அது எனக்கே தெரியாது. அந்த 2 சகோதரர்களுக்கும் சொல்லித்தான் தெரியும். சிசிடிவி கேமராவைப் பார்த்தபோது அப்பா பாடல்களைக் கேட்டுக்கொண்டு தாளம் போடுவது தெரிந்தது. அவர் நினைவாற்றல் இல்லாமல் இல்லை, நன்றாகத்தான் இருந்தார்.

யாரும் அப்பாவை தப்பா பேச வேண்டாம். டிசம்பர் 26ம் தேதி மருத்துவமனையில் சேர்த்தோம். எப்படியும் வருவார் என நினைத்தோம். ஆனால் வரவில்லை. கேப்டனைப் போலவே, ‘இந்த விஜயகாந்த் மக்களுக்காகத்தான் வாழ்ந்தான், வாழ்வான், வாழ்ந்துகொண்டே இருப்பான் என்பதை சொல்லிக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை நடத்திய தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ (Vijaya Prabhakaran Speech) என்றார்.

Latest Slideshows

Leave a Reply