Vijayakanth Health Condition : விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள நல்ல செய்தி

  • கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு (Vijayakanth Health Condition) வருகிறது.
  • இந்நிலையில், மருத்துவமனையில் இருக்கும் விஜயகாந்தை நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி இருவரும் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து நாசர் பகிர்ந்துள்ள தகவலால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Vijayakanth Health Condition - தொடர் சிகிச்சை :

கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமா மற்றும் அரசியலில் கலக்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு தொண்டர்களை சந்திக்காமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கேப்டன் விஜயகாந்த் தற்போது மியாட் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து, கடந்த 29ம் தேதி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அவரது உடல்நிலை சீராக இல்லை என (Vijayakanth Health Condition) தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அவரது தொண்டர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்தனர்.

விஜயகாந்த் உடல் நலம் :

Vijayakanth Health Condition : இதையடுத்து கேப்டனின் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், விஜயகாந்துக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் பூரண நலத்துடன் (Vijayakanth Health Condition) வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார். இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். கேப்டன் விரைவில் நலமடைந்து தங்களை சந்திக்க வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில், இப்போது நடிகர் சங்கத் தலைவரும், ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கேப்டன் நலமாக உள்ளார். அனைத்து உறுப்புகளும் செயல்படுகின்றன. கடந்த சில நாட்களாக வரும் செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை. அவர் நலமாக இருப்பதாக தலைமை மருத்துவர் கூறியதாக கூறினார்.

யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். இரண்டு மாதங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ, இப்போதும் அப்படியே இருக்கிறார். கேப்டன் திரும்பி வருவார். நம்மிடம் பேசுவார். எங்களுடன் தோன்றுவார் என்று கூறியுள்ளார். இந்த தகவலால் ரசிகர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர். நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்த காலத்தில் திரையுலகிற்கு பல நல்ல விஷயங்களை செய்துள்ளார். இதனால் சினிமா துறையை சேர்ந்த பலரும் கேப்டன் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply