Vijayakanth's Name For Nadigar Sangam Building : நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பதில் தவறில்லை

நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை சூட்டுவதில் தவறில்லை (Vijayakanth’s Name For Nadigar Sangam Building) என நடிகரும், இயக்குனருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் தற்போது காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. விஜயகாந்தை கடைசியாக பார்க்க தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் சென்னை நோக்கி வந்தனர். சமூக வலைதளங்கள் மூலமாகவும் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். பொதுமக்களின் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் அதிக கூட்டம் காரணமாக அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் இருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. லட்சக்கணக்கான மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் வருகை தந்தனர். நேரில் கலந்து கொள்ள முடியாத பிரபலங்கள் சமூக வலைதளங்களிலும், காணொளி மூலமாகவும் இரங்கல் தெரிவித்தனர்.

Vijayakanth's Name For Nadigar Sangam Building - நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் :

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி நேரில் சென்று மரியாதை செலுத்தினார். மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதையடுத்து, நடிகர் சங்க கட்டிடத்திற்கு மறைந்த கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க கோரிக்கை (Vijayakanth’s Name For Nadigar Sangam Building) முன்வைத்தார். அதேபோல் நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என ஜாக்குவார் தங்கம், ராம்கி உள்ளிட்ட பிரபலங்கள் கோரிக்கை விடுத்தனர். அதேபோல், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இதுபற்றி ஜாக்குவார் தங்கம் பேசுகையில், “விஜயகாந்தின் இழப்பால் திரையுலகமே வீழ்ச்சியடைந்து விட்டது போலிருக்கிறது. ஏனெனில், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவரே குரல் கொடுப்பார். அவரிடம் உதவி கேட்கவே வேண்டாம், அவர் நம்மைப் பார்த்தவுடன் என்ன பிரச்சனை என்று அழைத்து பேசுவார். இன்று நடிகர் சங்கம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அதற்கு கேப்டன் தான் காரணம். எனவே நடிகர் சங்கம் கட்டி முடிக்கப்பட்டவுடன் கேப்டன் விஜயகாந்த் பெயரை (Vijayakanth’s Name For Nadigar Sangam Building) வைக்க வேண்டும் என நாசர், விஷால், கார்த்திக் ஆகியோரை கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

நடிகர் சசிகுமார் பேட்டி :

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவையொட்டி நடிகரும், இயக்குனருமான சசிகுமார், பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சசிகுமார் கூறியதாவது, கேப்டன் விஜயகாந்தின் இழப்பு என்பது பேரிழப்பு. நான் கம்பெனி ஆரம்பிக்கும் போது கூட கேப்டன் விஜயகாந்த் எப்படி எல்லாருக்கும் ஒரே மாதிரி சாப்பாடு கொடுத்தாருன்னு சொன்னேன். இதையெல்லாம் கேப்டன் விஜயகாந்திடம் இருந்து கற்றுக்கொண்டேன். கேப்டன் விஜயகாந்த் முதல்வராக இருந்திருந்தால் பெரிய தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கலாம். எம்ஜிஆர் இறந்த பொது எவ்வளவு கூட்டம் இருந்ததோ அதே கூட்டம் விஜயகாந்த் இறந்தபோதும் இருந்தது. இன்றும் மக்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சங்கத்தின் கடனை அடைந்தவர் விஜயகாந்த். நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவர் பெயர் (Vijayakanth’s Name For Nadigar Sangam Building) வைக்க வேண்டும். அவர் பெயரிடுவதில் தவறில்லை. அனைத்து தலைவர்களும் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply